மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக மோசடி கைதான ராஜேஷ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு


மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக மோசடி கைதான ராஜேஷ் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 15 March 2018 3:33 AM IST (Updated: 15 March 2018 3:33 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக மோசடி செய்த ராஜேஷ் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

சென்னையில் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு வருகிறார்கள். அதன்படி நேற்று பாலகிருஷ்ணன், சந்திரமூர்த்தி, பார்த்திபன், மஞ்சுளா, ராஜேஷ் என்ற ராஜேஷ்வரன், ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ராஜேஷ் மீது 7 மோசடி வழக்குகள் உள்ளது. மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித்தருவதாக ரூ.2 கோடி அளவிற்கு பணம் வசூலித்து ஏமாற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மோசடி செய்த பணத்தில் இவர் வாங்கி குவித்துள்ள சொத்துக்களை முடக்கி பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சிபாரிசின் பேரில் இவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Next Story