சேலம் மாநகராட்சி அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணிமண்டபம் அமைக்க ரூ.80 லட்சம் ஒதுக்கீடு


சேலம் மாநகராட்சி அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணிமண்டபம் அமைக்க ரூ.80 லட்சம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 15 March 2018 3:45 AM IST (Updated: 15 March 2018 3:45 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சி அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மணிமண்டபம் அமைப்பதற்காக ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி, கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா பூங்காவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிலையில் சேலம் அண்ணா பூங்காவில் மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்பம் அமைக்க ரூ.80 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசு அறிவித்துள்ளது. மணிமண்டபம் அமைக்கப்பட உள்ள இடத்தை ஏற்கனவே மாநகர போலீசார் ஆய்வு செய்து, பாதுகாப்பு குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து இருந்தனர்.

மேலும் மாநகராட்சி நிர்வாகமும் அளவீடு செய்து, மணிமண்டபம் அமைப்பதற்கான ஆயத்தப்பணிகளை ஆய்வு செய்தது. மேலும் பணியை விரைவாக தொடங்கி முடிக்கும் வகையில் சேலம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளியினை(டெண்டர்) வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற 28-ந் தேதி மாலை 3.30 மணிக்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் விரைவாக தொடங்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story