பால்கர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைவால் 396 குழந்தைகள் உயிரிழப்பு மந்திரி பங்கஜா முண்டே தகவல்
பால்கர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் மட்டும் 396 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழந்துள்ளனர் என்று மந்திரி பங்கஜா முண்டே கூறியுள்ளார்.
மும்பை,

குழந்தைகள் இறப்பு
பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பால்கர் மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று நடந்த மராட்டிய மேல்-சபை கூட்டத்தில் சிவசேனா கட்சியின் ரவீந்திர பதக் இதுகுறித்து கவன ஈர்ப்பு கொண்டுவந்தார். அவர் கூறுகையில், “தற்போது ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் இறக்கும் விகிதம் அதிகரித்து வருகிறது. இதன் தீவிர தன்மையை அரசு புரிந்துகொண்டு, இதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி பங்கஜா முண்டே கூறியதாவது:-
பெற்றோருக்கு பயிற்சி
நடப்பு ஆண்டில் மட்டும் 396 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறந்துள்ளனர். இருப்பினும் இந்த உயிரிழப்புகளுக்கு ஊட்டசத்து மட்டுமின்றி மருத்துவ காரணங்களும் உள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக “கிராம் விகாஸ் கந்த்ராஸ்” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.
அதுமட்டும் அல்லாமல் மருத்துவ அதிகாரிகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் பெற்றோருக்கு மருத்துவ சேவைகள் குறித்த பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story