பெல்ட்டில் மறைத்து வைத்து 1¼ கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பேர் கைது
சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் பெல்ட்டில் மறைத்து வைத்து 1¼ கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பேரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பிடிபட்ட 2 பேரும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
கோவை,
கோவையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்துக்கு சார்ஜா, இலங்கை, சிங்கப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும், உள்நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் விமானங்களில் தங்கம் மற்றும் வரி செலுத்தப்படாத பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்பதை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா என்ற விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் கோவை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்துடன் அந்த விமானத்தில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும் தீவிர சோதனை செய்தனர்.
அப்போது அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த 2 வாலிபர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். ஆனால் அவர்கள் கொண்டு வந்த பை மற்றும் சூட்கேசில் தங்கம் இல்லை.
இதையடுத்து அதிகாரிகள் அவர்கள் இடுப்பில் அணிந்து இருந்த பெல்ட்டை கழற்றி சோதனை செய்தபோது, தங்கத்தை பொடியாக மாற்றி அதை பேஸ்ட்டில் கலந்து அதை பெல்ட்டில் ஒட்டி, மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது.
சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த ஆஷாப் (வயது 38), இடுக்கியை சேர்ந்த சுனீர் (37) ஆகியோர் கோவை வந்தனர். அவர்கள் இருவரின் இடுப்பில் கட்டி இருந்த பெல்ட்டில், தங்கத்தை பொடியாக மாற்றி எரால்டிட் என்ற பேஸ்ட்டில் கலந்து, அதை கடத்தி வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கத்தின் எடை 1 கிலோ 381 கிராம் ஆகும். அவற்றின் மதிப்பு ரூ.43 லட்சம் ஆகும்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் இதுபோன்று பலமுறை தங்கம் கடத்தி வந்துள்ளனர். பேஸ்ட்டில் கலக்கப்பட்ட தங்கம் தனியாக பிரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story