பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 March 2018 4:30 AM IST (Updated: 16 March 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

மத்திய பட்ஜெட்டில் மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிரான அம்சங்களை நீக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது. கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதியம் உருவாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. மாவட்ட செயலாளர் சிவபெருமாள் தலைமை தாங்கினார். பெல் தொழிற்சங்க பேரவை செயலாளர் எத்திராஜ் முன்னிலை வகித்தனர். தொ.மு.ச. மாவட்ட தலைவர் குணசேகரன், பி.எஸ்.என்.எல். ரவீந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சம்பத், ஏ.ஐ.டி.யு.சி. சுரேஷ், ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ். உள்பட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்புக்கொடியை கையில் பிடித்துக்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். 

Next Story