திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் 24–ந் தேதி நடக்கிறது
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 24–ந் தேதி நடக்கிறது.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 24–ந் தேதி நடக்கிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள படித்த மற்றும் படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாமை திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் வருகிற 24–ந் தேதி (சனிக்கிழமை) நடத்துகிறது.
இந்த முகாமில் தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
கல்வித்தகுதி
முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற 18 வயதுக்கு மேற்பட்ட 5–ம் வகுப்பு தேறிய, தவறியவர்கள் முதல் ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு வரை படித்த ஆண், பெண்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் வருகிற 24–ந் தேதி காலை 9 மணிக்கு தங்களுடைய சுயவிவரங்கள் மற்றும் கல்வி சான்றிதழுடன் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தங்கள் பெயர் மற்றும் கல்வி தகுதி விவரங்களை முன்பதிவு செய்து கொண்டு முகாமில் கலந்து கொள்ளலாம்.
முகாமில் இளைஞர்களுக்கான அரசு திட்டங்கள் குறித்த அரங்குகள், வேலைவாய்ப்பு அட்டை புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி பெறுதல், சுயதொழில் தொடங்க கடன் உதவி பெறுவதற்கான அரங்குகளும் அமைக்கப்படுகிறது. எனவே இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.
20–ந் தேதிக்குள்...
மேலும் பணியாளர்கள் தேவைப்படும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விவரங்களுடன் வருகிற 20–ந் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) திட்ட அலுவலர், மகளிர் திட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், தூத்துக்குடி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story