மனுநீதிநாள் முகாமில் 171 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


மனுநீதிநாள் முகாமில் 171 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 16 March 2018 3:30 AM IST (Updated: 16 March 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

வாலாஜாபாத்தை அடுத்த கிதிரிபேட்டை ஊராட்சியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. இதில் 171 பேருக்கு ரூ.32 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

வாலாஜாபாத்,

வாலாஜாபாத்தை அடுத்த கிதிரிபேட்டையில் மனுநீதிநாள் முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கி பல்வேறு மனுக்களை வாங்கினார்.

இதில் உள்ளாவூர், ஏகனாம்பேட்டை, ஆற்பாக்கம், மாகரல், வரதாபுரம், பாலூர், பெரியாநத்தம், பழைய சீவரம், கீழ்பெரமநல்லூர், அயிமிச்சேரி, சின்னிவாக்கம், புத்தகரம், தம்மனூர், வில்லிவலம், கிதிரிபேட்டை, வெண்குடி, பூசிவாக்கம், திம்மராஜாம்பேட்டை, தேணான்குளம், கீழ்ஒட்டிவாக்கம், சீயமங்களம் காலனி, தேவிரியம்பாக்கம், வீரப்பராஜாம்பேட்டை, நெய்குப்பம், ஆம்பாக்கம், நாயகன்பேட்டை, தென்னேரி, திருவெங்கரணை, அய்யன்பேட்டை, குருவிமலை, ஊத்துக்காடு, புதுப்பேட்டை, முத்தியால்பேட்டை, குண்ணவாக்கம், அகரம், நாயக்கன்குப்பம், இளையனார்வேலூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் உதவித்தொகை, தமிழக முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை, நலிந்தோர் நிவாரண திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, ஆண் வாரிசு இல்லா சான்று, விதவைச்சான்று, வாரிசு சான்று உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் என்று மொத்தம் 171 பேருக்கு ரூ.32 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

முன்னதாக பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டார். கிதிரிபேட்டை ஊராட்சியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கால்நடை கிளை நிலையத்தை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உத்திர மேரூர் எம்.எல்.ஏ. சுந்தர், முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜாபாத் கணேசன், வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ, தனித்துறை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சக்திவேல், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சுந்தர்ராஜ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஸ்ரீநாத், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி தமிழ்செல்வி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி முரளி, மாவட்ட திட்ட அதிகாரி (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) சற்குணம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story