விவசாயி சரமாரி வெட்டிக்கொலை கள்ளக்காதலை கைவிட சொன்னதால் பால்முகவர் வெறிச்செயல்
தேன்கனிக்கோட்டை அருகே கள்ளக்காதலை கைவிட சொன்ன விவசாயி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பால் முகவரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா முத்துராயன் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னபையன் (வயது 48), விவசாயி. இவருக்கு முத்துமாரி (40) என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர். அதில் மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
சின்னபையன் விவசாயம் செய்து வந்ததோடு, மாடுகளும் வளர்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அன்னையப்பா. இவரது மகன் முனிராஜ் (36). பால் முகவர். இவர் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பாலை வாங்கி அதை தனியார் பால் கொள்முதல் நிலையத்திற்கு அனுப்பி வருகிறார். இவரிடம் சின்னபையனும் பால் கொடுத்து வந்தார். இதனால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதனால் முனிராஜ், சின்னபையனுக்கு ரூ.3.50 லட்சம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சின்னபையனின் மனைவி முத்து மாரிக்கும், முனிராஜிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இந்த கள்ளக்காதலை அறிந்த சின்னபையன், மனைவியுடன் உள்ள தொடர்பை கைவிடுமாறு முனிராஜை கண்டித்தார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் முனிராஜ் தான் கொடுத்த கடன் தொகை ரூ.3.50 லட்சத்தை தருமாறு சின்னபையனிடம் கேட்டு வந்தார். இது தொடர்பாகவும் சின்னபையன்-முனிராஜ் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
எனவே, முனிராஜ் தனது கள்ளக்காதலுக்கு சின்னபையன் இடையூறாக இருந்து வருவதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவு சின்னபையன் சொந்த வேலையாக வெளியூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திப்பசந்திரம்-முத்துராயன் கொட்டாய் கிராமத்திற்கு செல்லும் வழியில் எதிரே காரில் வந்த முனிராஜ், தான் ஓட்டி வந்த காரை மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் சின்னபையன் தூக்கி வீசப்பட்டார்.
இதையடுத்து, காரில் இருந்து கீழே இறங்கிய முனிராஜ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சின்னபையனை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதன்பிறகு முனிராஜ் அங்கிருந்து காரில் தப்பிச்சென்று விட்டார். சின்னபையனின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிறிது நேரத்தில் சின்னபையன் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலையுண்ட சின்னபையனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், முனிராஜ்தான், சின்னபையனை வெட்டிக்கொலை செய்தார் என்பது உறுதியானது. இதையடுத்து முனிராஜை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் விவசாயி மீது காரை மோதி சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் தேன்கனிக்கோட்டை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story