பெங்களூருவில் ‘சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ மந்திரி ராமலிங்கரெட்டி உத்தரவு
பெங்களூருவில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.
பெங்களூரு,

ரவுடிகளின் அட்டகாசத்தை...
கர்நாடக போலீஸ் துறை மந்திரி ராமலிங்கரெட்டி பெங்களூருவில் நேற்று நகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் மற்றும் உயர் அதிகாரிகளுடன் விதான சவுதாவில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் மந்திரி ராமலிங்கரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூருவில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவது, ரவுடிகளின் அட்டகாசத்தை தடுப்பது, போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தல், செயின் பறிப்பு சம்பவங்கள் மற்றும் கற்பழிப்புகளில் ஈடுபடுகிறவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்கும்படி போலீஸ் அதி காரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
புறக்காவல் நிலையங்களை...
மதுபான விற்பனை, ஒயின் விற்பனை நிலையங்களை குறித்த காலத்திற்குள் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறேன். குற்ற சம்பவங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் கூறியுள்ளேன். குறிப்பாக பெண்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் புறக்காவல் நிலையங்களை தொடங்கியுள்ளோம்.
கந்துவட்டி வசூலிப்பவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கொலை மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க ரோந்து, துணை ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரை போஸ்கோ(கற்பழிப்பு தடை சட்டம்) சட்டத்தின் கீழ் 33 வழக்குகளில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது.
குண்டர் சட்டத்தின் கீழ்...
கர்நாடகத்தில் 2008-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை அதாவது முந்தைய பா.ஜனதா ஆட்சியில் 1,160 கொலைகள் நடந்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 5 ஆண்டுகளில் கொலைகளின் எண்ணிக்கை குறைவு தான். 98 கொலைகள் நடந்து இருக்கின்றன. முந்தைய ஆட்சியில் 1,808 செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
எங்கள் ஆட்சியில் இதுவரை 1,770 செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. முந்தைய பா.ஜனதா ஆட்சியில் குண்டர் சட்டத்தின் கீழ் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எங்கள் ஆட்சியில் குண்டர் சட்டத்தின் கீழ் 71 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மந்திரி ராமலிங்கரெட்டி கூறினார்.

Related Tags :
Next Story