டெல்லி மேல்-சபை தேர்தலில் வாக்களிக்க 7 எம்.எல்.ஏ.க்களுக்கு தடை விதிக்க வேண்டும் ஜனதா தளம்(எஸ்) மனு
டெல்லி மேல்-சபை தேர்தலில் வாக்களிக்க 7 எம்.எல்.ஏ.க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சட்டசபை செயலாளரிடம் ஜனதா தளம்(எஸ்) மனு கொடுத்தது.
பெங்களூரு,

5 மனுக்கள் தாக்கல்
கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்-சபையில் காலியாகும் 4 இடங்களுக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி முடிவடைந்தது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளால் 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. 5 வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். ஆனால் வேட்பாளர்கள் யாரும் மனுக்களை வாபஸ் பெறவில்லை. இதனால் தேர்தல் களத்தில் 4 இடங்களுக்கு 5 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இதனால் வருகிற 23-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான மூர்த்தியை ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நிங்கையா, பாலகிருஷ்ணா ஆகியோர் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் நேரில் சந்தித்து பேசினர்.
வாக்களிக்க தடை
அப்போது தேர்தல் அதிகாரியிடம் அவர்கள் ஒரு மனுவை கொடுத்தனர். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி மேல்-சபை தேர்தலில் கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 7 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை இந்த தேர்தலில் அவர்கள் வாக்களிக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த சந்திப்புக்கு பின் நிங்கையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற டெல்லி மேல்-சபை தேர்தலில் எங்கள் கட்சிக்கு எதிராக 7 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட்டனர். அவர்கள் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டனர். இதனால் அவர்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சபாநாயகரிடம் மனு வழங்கி இருக்கிறோம். சபாநாயகர் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. எனவே 23-ந் தேதி நடைபெற உள்ள தேர்தலில் வாக்களிக்க 7 எம்.எல்.ஏ.க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளோம். நாங்கள் கொடுத்த மனு மீது 2 நாட்களில் முடிவு அறிவிக்க வேண்டும் என்றும் நாங்கள் கூறியுள்ளோம்“ என்றார்.

Related Tags :
Next Story