காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் முடிவை கர்நாடகம் கைவிட்டது
காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவை கர்நாடக அரசு கைவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு,

காவிரி நதிநீர் விவகாரம்
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் (பிப்ரவரி) 16-ந் தேதி தீர்ப்பு கூறியது. இதில் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) ஒதுக்கப்பட்டது. இதை கர்நாடகம் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றது.
ஆனால் கர்நாடக மக்கள் கொண்டாடுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் எதுவும் இல்லை என்று தேவேகவுடா கருத்து தெரிவித்து இருந்தார். அதோடு “காவிரி மேலாண்மை வாரியம் உள்பட தனியாக எந்த அமைப்பையும் உருவாக்கக்கூடாது. அவ்வாறு அமைத்தால் காவிரியின் மீதான கர்நாடகத்தின் உரிமை பறிபோகும். 45 டி.எம்.சி. தண்ணீர் பெறுவதற்கு நமக்கு உரிமை இருக்கும் நிலையில் 14.75 டி.எம்.சி. தண்ணீர் பெற்று இருப்பது நமக்கு வெற்றி கிடையாது.“ என்றும் கூறி இருந்தார்.
மறுஆய்வு மனு தாக்கல் இல்லை
இதனை தொடர்ந்து கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார். அதன்படி கடந்த 8-ந் தேதி பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது குறித்து சட்ட நிபுணர் களுடன் கலந்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனறு தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் காவிரி வழக்கில் கர்நாடகம் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள், மறுஆய்வு மனுவை தாக்கல் செய்து அதன் மூலம் கர்நாடகத்திற்கு பாதகமான தீர்ப்பு ஏதாவது வந்தால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கர்நாடகம் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்யும் ஆலோசனையில் இருந்து பின்வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அந்த முடிவை மாநில அரசு கைவிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவே கூடாது என்று மத்திய அரசிடம் வலியுறுத்த கர்நாடகம் முடிவு செய்துள்ளது.

Related Tags :
Next Story