நுகர்வோர் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்
நுகர்வோர் பாதுகாப்பு குழுவை அமைத்திடக்கோரி நுகர்வோர் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரி,
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்துக்கும், நுகர்வோருக்கு எதிராக புதுச்சேரி அரசு செயல்படுவதாகவும், மாநில நுகர்வோர் பாதுகாப்பு குழுவை அரசு அமைக்க வலியுறுத்தியும் உலக நுகர்வோர் நாளை புறக்கணிக்க போவதாக நுகர்வோர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்திருந்தது. இந்த குழுவினர் நேற்று புதுவை அரசை கண்டித்து தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு நுகர்வோர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அழகிரி தலைமை தாங்கி னார். பொதுச்செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, தமிழர் களம் அழகர், மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன், மக்கள் மன்ற தலைவர் நாராயணசாமி, மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்க பொதுச்செயலாளர் முருகானந்தம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். நுகர்வோர் ஒருங்கிணைப்பு குழுவின் நிர்வாகிகள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story