இட்லி மாவில் பூசப்பட்ட ஜன்னல் மாளிகை
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருக்கும் ‘ஹவா மகால்’ மிகவும் பழமையானது. 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சவாய் பிரதாப் சிங் என்ற மன்னர், அவரது ராணிகளுக்காகவே இந்த அரண்மனையை கட்டியிருக்கிறார்.
5 மாடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த அரண்மனையில் மொத்தம் 953 ஜன்னல்கள் உள்ளன. இவ்வளவு ஜன்னல்களா..! என்று ஆச்சரியப்படுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அரண்மனைக்குள் அடக்கம், ஒடுக்கமாக வாழும் ராணிகள் அடிக்கடி ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும், ஊர் சந்தைகளையும் வேடிக்கை பார்க்கவே, அரண்மனையை சுற்றி ஏராளமான ஜன்னல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி..? அரண்மனை கட்டமைக்கப்பட்ட விதமும், நம்மை ஆச்சரியப்படுத்தும்.
சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இந்த ஹவா மகாலை களிமண் மற்றும் சுண்ணாம்பு கற்களால் கட்டியிருக்கிறார்கள். இதனுடன் மிக முக்கியமான பொருளும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது என்ன தெரியுமா..? நமக்கு வழக்கமான காலை உணவாக மாறிப்போன இட்லி மாவும் இந்த மகால் கட்டமைப்பில் இடம்பெற்றிருக்கிறது. சுண்ணாம்பு மற்றும் களிமண் கலவையுடன் குறிப்பிட்ட அளவிலான அரிசி மாவு கலவையையும் சேர்த்து, ஹவா மகாலை கட்டியிருக்கிறார்கள். இதனால் ஹவா மகாலின் புகழ், கூடுதல் வாசனையோடு கமகமக்கிறது.

Related Tags :
Next Story