மலைக்குள் நீச்சல் குளம்


மலைக்குள் நீச்சல் குளம்
x
தினத்தந்தி 16 March 2018 2:15 PM IST (Updated: 16 March 2018 1:38 PM IST)
t-max-icont-min-icon

மெக்சிகோவின் யுகாடன் பகுதியில் ஒரு இயற்கை நீச்சல் குளம் அமைந்திருக்கிறது. இதை ‘ஹோல் ஆல் ஹெவன்’ என்று அழைக்கிறார்கள்.

மலைப் பகுதி போன்று காட்சியளிக்கும் இதன் நடுவே வெற்றிடமும், அதன் மையத்தில் ஆழமான நீச்சல் குளமும் அமைந்திருக்கிறது. மலையை குடைந்து அதன் நடுவே செயற்கையாக நீச்சல் குளம் அமைத்ததை போன்றே, இயற்கையே ஒரு நீச்சல் குளத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறது.

இயற்கை எழில் கொஞ்சும் நீச்சல் குளத்திற்கு இயற்கையே பாதி பணிகளை செய்து முடித்துவிட்டதால், மலையின் உச்சிக்கு செல்லும் படிகட்டுகள், நீந்தி முடித்ததும் களைப்பாறும் இருக்கைகள் போன்ற சின்ன சின்ன வேலைகளை மட்டும் மெக்சிகோ அரசாங்கம் செய்திருக்கிறது.

அதனால் ஹோல் ஆல் ஹெவன் நீச்சல் குளத்தில் நீந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகிறார்கள்.

Next Story