நகரும் தேவாலயம்


நகரும் தேவாலயம்
x
தினத்தந்தி 16 March 2018 2:30 PM IST (Updated: 16 March 2018 1:41 PM IST)
t-max-icont-min-icon

‘மெர்சி பஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தேவாலயம் ஏழை, எளிய மக்களை நாடிச் செல்கிறது. பிரார்த்தனைகள் நடத்துகிறது. ஆசீர்வாதங்களை வழங்குகிறது. பாவ மன்னிப்புகளை அளிக்கிறது. சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறது.

நகரும் தேவாலயத்துக்கான திட்டத்தை உருவாக்கியவர் பாதர் ப்ரான்கி மல்க்ரூ. கடந்த ஆண்டு போப் பிரான்சிஸை சந்தித்தபோது பாதர் ப்ரான்கிக்கு இந்த யோசனை உதித்ததாம்.

‘அர்ஜெண்டினாவில் ஏழைகள் வாழும் இடங்களில் போப் திறந்தவெளியில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தினார். அப்போது தோன்றியதுதான் இந்த யோசனை.

இன்று போப் ஆசியுடன் நகரும் தேவாலயத்தை இயக்கி வருகிறோம். மிக அற்புதமான அனுபவங்கள் கிடைத்து வருகின்றன. ஏழைகளை நாடி, தேடிச் செல்கிறோம்” என்கிறார் ப்ரான்கி.

Next Story