கூடங்குளம் முதல் அணுஉலையில் பழுது சரிபார்ப்பு: மீண்டும் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தியை எட்டியது


கூடங்குளம் முதல் அணுஉலையில் பழுது சரிபார்ப்பு: மீண்டும் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தியை எட்டியது
x
தினத்தந்தி 17 March 2018 2:00 AM IST (Updated: 17 March 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதலாவது அணுஉலையில் பழுது சரிசெய்யப்பட்ட பின்பு மீண்டும் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியது.

வள்ளியூர்,

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதலாவது அணுஉலையில் பழுது சரிசெய்யப்பட்ட பின்பு மீண்டும் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியது.

முதல் அணு உலை


நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளத்தில் ர‌ஷய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அணுஉலைகளின் மூலம் தலா ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தென்னக மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 7–ம்தேதி முதல் அணு உலையில் வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பழுது நீக்கும் பணியில் இந்திய மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். கடந்த 11–ம்தேதி வால்வில் ஏற்பட்ட பழுது நீக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

மீண்டும் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி


முதலில் 300 மெகாவாட்டாக தொடங்கப்பட்டு படிப்படிப்பாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு நேற்று அதிகாலையில் முழு உற்பத்தி திறனான ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியை மீண்டும் எட்டியது.

ஏற்கனவே இரண்டாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும், எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காகவும் கடந்த 19–ம்தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story