பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 170 தியேட்டர்களை மூடி உரிமையாளர்கள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 170 தியேட்டர்களை மூடி அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசுக்கு தினமும் ரூ.15 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
கோவை,
8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், இருக்கைகள் குறைப்புக்கு அனுமதி வழங்க வேண்டும், தியேட்டர்கள் உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை சினிமா மாவட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் மொத்தம் 170 தியேட்டர்கள் உள்ளன.
கோவை மாவட்டத்தில் மட்டும் 60 தியேட்டர்கள் உள்ளன. இங்கு தினமும் 4 காட்சிகள் நடக்கிறது. நேற்று கோவை சினிமா மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் சினிமா திரையிடப்பட வில்லை. அனைத்தும் காலை முதல் மூடப்பட்டன.
இதனால் நேற்று காலையில் தியேட்டர்களுக்கு சினிமா பார்க்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். ஆனால் நேற்று கோவையில் உள்ள தனியார் வணிக வளாகங்களில் இருக்கும் 11 தியேட்டர்களில் மட்டும் சினிமா திரையிடப்பட்டது. அதிலும் தமிழ் அல்லாமல் வேறு மொழியில் எடுத்த திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டது. இதனால் அந்த படங்களை பார்க்க கூட்டம் அலைமோதியது. பலர் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காணமுடிந்தது.
இது குறித்து கோவை சினிமா மாவட்ட திரையரங்கு உரிமையாளர் சங்கம் மற்றும் வினியோகஸ்தர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது:-
தியேட்டர்களில் டிக்கெட்டுக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தில் 100 ரூபாய்க்கு கீழ் இருந்தால் 18 சதவீதமும், 100 ரூபாய்க்கு மேல் இருந்தால் 28 சதவீதமும் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது. இதுதவிர கேளிக்கை கட்டணமாக ரூ.8 சதவீதம் வசூலிக்கிறார்கள். நாடு முழுவதும் ஒரே வரி இருக்க கூடுதலாக 8 சதவீத கேளிக்கை வரி வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றுதான் நாங்கள் கூறி வருகிறோம்.
அதுபோன்று தியேட்டர் பராமரிப்பு கட்டணமாக குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டரில் சினிமா பார்க்க ரூ.5-ம், குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டரில் சினிமா பார்க்க ரூ.3-ம் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தோம். ஆனால் அதை அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை.
கோவை சினிமா மாவட்டத்தில் உள்ள தியேட்டர்கள் மூலம் வாரத்துக்கு ரூ.10 கோடி வசூல் செய்யப்படுகிறது. தினமும் அரசுக்கு ரூ.15 லட்சம் வரி செலுத்தி வருகிறோம். ஆனால் அரசு எங்கள் கோரிக்கையை செவிசாய்க்க மறுக்கிறது. நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் அரசுக்கு தினமும் ரூ.15 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
ஏற்கனவே தியேட்டர்களுக்கு பொதுமக்கள் வருகை குறைந்து விட்டதால் பல இடங்களில் ஏராளமான தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. இந்த நிலை நீடித்தால் தியேட்டர்கள் நினைவு சின்னமாக மாறிவிடும். எனவேதான் நாங்கள் எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களின் சங்க நிர்வாகிகள் தமிழக கவர்னரை சந்தித்து மனு கொடுத்து உள்ளனர். எனவே தமிழக அரசு எங்களுடைய கோரிக்கைகளை செவிசாய்த்து ஏற்கும் என்று எதிர்பார்க்கிறோம். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story