குரங்கணி காட்டுத்தீ: மேலும் 2 பெண்கள் சாவு, இறந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு
குரங்கணி காட்டுத்தீ விபத்தில் காயம் அடைந்த மேலும் 2 பெண்கள் நேற்று இறந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை,
தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் மலையேற்ற பயிற்சிக்காக சென்றிருந்த குழுவினர் சிக்கினர். அவர்களில் சம்பவ இடத்திலேயே 9 பேர் கருகி இறந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயம் அடைந்து மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் சென்னையைச் சேர்ந்த நிஷா, ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த திவ்யா, கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச்சேர்ந்த திவ்யா விஸ்வநாதன், கவுந்தப்பாடியைச் சேர்ந்த கண்ணன், சென்னை அனுவித்யா ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து இருந்தது.
இந்தநிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சக்திகலா, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தேவி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தனர். இதன் மூலம் சாவு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
சக்திகலா (வயது 40), திருப்பூர் மாவட்டம் தேக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். யோகா ஆசிரியையான இவருடைய கணவர் சரவணன், வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு பாவனா (12), சாதனா (11) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
சக்திகலா, தன் குழந்தைகளுடன் இந்த மலையேற்ற பயிற்சிக்குச் சென்றிருந்தார். காட்டுத்தீ பரவியபோது அவருடைய குழந்தைகளை காப்பாற்றப்பட்டு விட்டனர். ஆனால் சக்திகலா தீயில் சிக்கிக்கொண்டார். மதுரை எல்லீஸ் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்து கணவர் சரவணன் நேற்றுமுன்தினம் மதுரை வந்தார்.
இந்த நிலையில் சக்திகலாவின் உயிர் நேற்று பிரிந்து விட்டது.
நேற்று உயிர் பிரிந்த மற்றொருவரான தேவி (29), சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த வேட்டுவப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருடைய மகள்.
என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந் தார். தோழிகளுடன் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற இடத்தில் தீ விபத்தில் சிக்கிய இவர், மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.
தீ விபத்தில் பலத்த காயங்களுடன் தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்கள் விவரம் வருமாறு:-
1) உடுமலைப்பேட்டை முருகபூபதி மகள் சிவசங்கரி (25), இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.
2) தஞ்சாவூர் எம்.கே.மூப்பனார் சாலையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகள் சாய் வசுமதி(26),
3) ஈரோடு, சித்தோட்டைச் சேர்ந்த சதீஷ்குமார்(29)
4) சென்னை எத்திராஜன் மகள் நிவ்ய பிரக்ருதி(26)
5) சென்னை தினேஷ்குமார் மனைவி சுவேதா(24).
6) கேரள மாநிலம் கோட்டயம் ஜோசப் ஜார்ஜ் மகள் மீனா(25),

Related Tags :
Next Story