பட்ஜெட்டில் புறக்கணிப்பு: அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு நிதி ஒதுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது
தமிழக பட்ஜெட்டில் அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு நிதி ஒதுக்காததால் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தொழிற்சங்கத்தினர் கருத்து தெரிவித்தனர் .
கூடலூர்,
உலகம் முழுவதும் வாழும் மக்கள் அருந்தும் பானங்களில் தேநீர் முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனால் தேயிலை உற்பத்தியில் இந்தியா, இலங்கை, கென்யா, மலேசியா என பல நாடுகள் ஈடுபட்டுள்ளன. தூங்கி எழுந்ததும் உடல் புத்துணர்வு பெறுதல், மூளை செயல் திறன் அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பான்மையான மக்கள் தேநீரை பருகி வருகின்றனர். உலக அளவில் தேயிலை தூளின் தேவை அதிகமாக இருந்தாலும் அதை உற்பத்தி செய்யும் விவசாயிகள், தொழிலாளர்களின் நிலை மட்டும் உயர வில்லை.
பச்சை தேயிலைக்கு போதிய விலை இல்லை. இதன் காரணமாக தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பணபலன்களும் சரிவர கிடைப்பது இல்லை. 1964-ம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தப்படி 5¼ லட்சம் தமிழர்கள் தாயகம் திரும்பினர். இவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் குடியமர்த்தப்பட்டனர். கேரளாவில் ரப்பர் தோட்டங்கள், ஆந்திராவில் நூற்பாலைகள், கர்நாடகாவில் காபி எஸ்டேட்டுகளில் வேலை வழங்கப்பட்டது.
1969-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டம் கூடலூர் பாண்டியாறு, சேரம்பாடி, சேரங்கோடு, நெல்லியாளம் பகுதியில் வனநிலத்தில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் உருவாக்கப்பட்டு தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வேலை வழங்கப்பட்டது. அதன்பின்னர் குன்னூர், கோத்தகிரி பகுதியில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் தொடங்கப்பட்டது. இதற்காக வனத்துறை வன நிலம் 4,500 ஹெக்டேர் பரப்பளவு ஒதுக்கப்பட்டது. மேலும் குளோனல் எனும் வீரிய ஒட்டுரக தேயிலை நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.
இதனால் வர்த்தக ரீதியாக தேயிலை தோட்ட கழகம் செயல்பட தொடங்கியதும் நல்ல லாபமும் கிடைத்தது. இதன் உபரி லாபம் தமிழக அரசுக்கு பங்கு ஈவு தொகையாக வழங்கப்பட்டது. மேலும் நலிவடைந்து கிடந்த சின்கோனா (மலேரியா காய்ச்சல் ஒழிப்பு மருந்து தயாரிக்கும் துறை) தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்துடன் இணைக்கப்பட்டது. இதேபோல் சின்கோனா தொழிலாளர்களுக்கும் அரசு தேயிலை தோட்ட கழகத்தில் இருந்து சம்பளம் வழங்கப்பட்டது.
மேலும் தேயிலை தோட்ட கழகத்தில் கிடைக்கும் லாபத்தை கொண்டு காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை தோட்டங்கள் புதியதாக உருவாக்கப்பட்டன. 1976-ம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு வனநிலம் குத்தகைக்கு விடப்பட்டது. ஆண்டு ஒன்றுக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் வீதம் குத்தகை தொகையை டேன்டீ நிர்வாகம் வனத்துறைக்கு வழங்கி வருகிறது.
டேன்டீயில் 5 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்காலிக தொழிலாளர்களும் பணியில் இருந்தனர். ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2,500 தற்காலிக தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட வில்லை. மேலும் ரூ.700 கோடிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் டேன்டீக்கு உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தின் குத்தகை காலம் வருகிற 2026-ம் ஆண்டு முடிவடைய உள்ளது. 8 ஆண்டுகள் மட்டுமே உள்ளதால் குத்தகை காலத்தை நீட்டிக்க வேண்டும் என தோட்ட தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக சேரங்கோடு, சேரம்பாடி, நெல்லியாளம் டேன்டீ காலாவதியாகி விடும் சூழல் நிலவுகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சேரம்பாடி டேன்டீ தொழிற்சாலையும் மூடப்பட்டது. அரசு தேயிலை தோட்ட கழகம் (டேன்டீ) மூடப்பட்டால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தொழிலாளர்கள் நாளுக்குநாள் கலக்கம் அடைந்து வருகின்றனர்.
இதேபோல் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை மேம்படுத்த ரூ.100 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்க வேண்டும் என அனைத்து தொழிற்சங்கங்களும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் பட்ஜெட்டில் டேன்டீக்கு சிறப்பு நிதி ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என தொழிலாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் நிதி ஒதுக்கப்படுவது இல்லை.
நேற்று முன்தினம் தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது சம்பந்தமாக அறிவிப்பாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டேன்டீ பற்றிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படாமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள், டேன்டீ தொழிற்சாலை பணியாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் டேன்டீ பொதுத்துறை நிறுவனத்தை மாநில அரசு கண்டு கொள்ளாமல் விடுகிறதா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.
இது குறித்து டேன்டீ தொழிலாளர்கள் கூறியதாவது:-
இலங்கையில் போர் நடைபெற்று வந்த சமயத்தில் அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தாயகம் திரும்ப முடிவு செய்தோம். அதன்பின்னர் இந்தியா- இலங்கை ஒப்பந்தப்படி கூடலூர் பகுதியில் மறுகுடியமர்த்தப்பட்டு தமிழக அரசு டேன்டீயை உருவாக்கியது. 42 ஆண்டுகளாக டேன்டீயில் பணியாற்றி வாழ்வை கழித்து வருகிறோம். 8 ஆண்டுகள் மட்டுமே குத்தகை காலம் உள்ளது. அதன் பின்னர் எங்களின் வாழ்க்கை கேள்வி குறியாகி விடுமோ? என்ற சூழலால், அச்சம் நிலவுகிறது.
இதனால் வனநிலத்தில் செயல்படும் டேன்டீயின் குத்தகை காலத்தை நீட்டிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சை தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்க செய்ய வேண்டும். டேன்டீ பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்க நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இவ்வாறு அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
எனவே தமிழக அரசு டேன்டீ தொழிலாளர்களின் அச்சத்தை போக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
திராவிடமணி எம்.எல்.ஏ. கூறிய தாவது:-
அரசு தேயிலை தோட்டங்களை புனரமைக்க மற்றும் மேம்படுத்த தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது கண்டிக்கத்தக்கது. வனத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வனநிலத்தில் செயல்படும் டேன்டீ குத்தகை காலம் 8 ஆண்டுகள் மட்டுமே உள்ளது. இது சம்பந்தமாக வனத்துறை செயலாளரை நேரில் சந்தித்து டேன்டீயின் குத்தகை காலத்தை நீட்டிக்க வேண்டும் என முறையீட்டுள்ளேன். அப்போது அவர் டேன்டீயில் பராமரிப்பு இன்றி காடுகள் மூடி கிடக்கும் இடங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறினார்.
இதனை உறுதி செய்யும் வகையில் கூடலூர் பாண்டியாறு டேன்டீயில் 135 ஏக்கர் வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளது. இதேபோல் டேன்டீ பகுதிகள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சேரம்பாடி டேன்டீ தொழிற்சாலையும் மூடப்பட்டு விட்டது. அரசு தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வந்த தற்காலிக தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இதனால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பராமரிப்பு பணியும் மேற்கொள்ள வில்லை.
டேன்டீயை மூடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருவது தெரிய வருகிறது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். வனத்துறை செயலாளரிடம் குத்தகை காலத்தை நீட்டிக்க வேண்டும். டேன்டீயை வனத்துறையிடம் ஒப்படைக்க கூடாது என கூறி உள்ளேன். டேன்டீ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் டி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
1976-ம் ஆண்டு வனநிலத்தில் டேன்டீ பொதுத்துறைநிறுவனம் உருவாக்கப்பட்டது. இங்கு 5 ஆயிரம் நிரந்தர மற்றும் 2,500 தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றினர். 2014-ம் ஆண்டு 2,500 தற்காலிக தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட வில்லை. இதனால் உரிய பருவத்தில் பச்சை தேயிலை அறுவடை செய்ய வில்லை. 1 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள தேயிலை செடிகளில் 4 ஆயிரம் கிலோ பச்சை தேயிலை பறிக்க வேண்டும். ஆனால் தொழிலாளர்கள் இல்லாததால் உரிய பருவத்தில் பச்சை தேயிலை பறிக்காமல் விடப்பட்டது.
ஆள்குறைப்பு காரணமாக உற்பத்தி சரிவு ஏற்பட்டது. மேலும் களை பறித்தல், மருந்து தெளித்தல், உரம் இடுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாததால் டேன்டீ தோட்டங்களை காட்டு செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இதனால் தரமான பச்சை தேயிலை கிடைப்பது இல்லை. டேன்டீயில் நிரந்தர தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேருக்கு மாதம் ரூ.4 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. இதேபோல் டேன்டீ நிர்வாக பணியாளர்களுக்கு 200 பேருக்கு ரூ.2 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.
தனியார் தேயிலை தோட்டங்களில் நிர்வாக பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஆனால் டேன்டீயில் காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. தனியார் தேயிலை தோட்டங்களில் உற்பத்தி செலவு குறைவாக உள்ளது. டேன்டீயில் அதிகமாக செலவிடப்படுகிறது. இதேபோல் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களை விட டேன்டீ தொழிலாளர்களுக்கு தினச்சம்பளத்தில் ரூ.6 குறைவாக வழங்கப்படுகிறது. டேன்டீ நிர்வாக செயல்பாடுகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.
இதனை களைந்து டேன்டீக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டேன்டீயை பற்றிய அறிவிப்பு எதுவும் வரவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் வனநிலத்தில் செயல்படும் டேன்டீயின் குத்தகை காலத்தை நீட்டிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை. இதனை உறுதி செய்யும் வகையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சேரம்பாடி டேன்டீ தொழிற்சாலை மூடப்பட்டது. இதனால் 29-01-2018 அன்று டேன்டீ இயக்குநர், வனத்துறை அமைச்சகத்துக்கும் டேன்டீ குத்தகை காலத்தை நீட் டிக்க கோரி தொழிற்சங்கங்கள் மூலம் நேரடி கடிதம் அனுப்பப் பட்டது.
இதை தொடர்ந்து 1-2-18 அன்று சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தொழிற்சங்க தலைவர்கள் அழைக்கப்பட வில்லை. டேன்டீ குத்தகை காலத்தை நீட்டிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை. இதனால் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து குத்தகை காலத்தை நீட்டிக்க பல்வேறு கட்ட போராட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே கருத்தை தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story