சுரண்டை அருகே இரும்பு கம்பியால் அடித்து பெட்ரோல் பங்க் ஊழியர் கொலை உரக்கடை அதிபர் கைது
சுரண்டை அருகே இரும்பு கம்பியால் அடித்து பெட்ரோல் பங்க் ஊழியர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உரக்கடை அதிபரை போலீசார் கைது செய்தனர்.
சுரண்டை,

பெட்ரோல் பங்க் ஊழியர்
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை தேவர் சாவடி தெருவை சேர்ந்தவர் பத்திரகாளி மகன் பழனியப்பன் (வயது 35). மாற்றுத்திறனாளியான இவர், சுரண்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதி பக்கத்து தெருவை சேர்ந்தவர் முத்துராமன். இவர் உரக்கடை நடத்தி வருகிறார்.
பழனியப்பன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு இடத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் பழனியப்பன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி, அவரை வேலையை விட்டு நிர்வாகம் நீக்கியதாக கூறப்படுகிறது.
இரும்பு கம்பியால் தாக்குதல்
இதற்கு முத்துராமன் தான் காரணம் என நினைத்து, பழனியப்பன் அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த 12–ந் தேதி முத்துராமனிடம், பழனியப்பன் மீண்டும் வாக்குவாதம் செய்துள்ளார். தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த முத்துராமன் தனக்கு அருகே கிடந்த இரும்பு கம்பியால் பழனியப்பனை அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த பழனியப்பன், சாம்பவர் வடகரையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சாவு
பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவில் பழனியப்பன் இறந்தார். இதுகுறித்து சாம்பவர் வடகரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மனோகரன் விசாரணை நடத்தி, முத்துராமனை கைது செய்தார்.

Related Tags :
Next Story