போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் ஜாமீன் மனு திருச்சி கோர்ட்டில் தள்ளுபடி
வாகன சோதனையின் போது, உஷா சாவுக்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, திருச்சி கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
திருச்சி,
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சூலமங்கலத்தை சேர்ந்த ராஜாவும், அவரது மனைவி உஷாவும் கடந்த 7-ந்தேதி மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு வந்தனர். அப்போது, துவாக்குடி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனை நடத்திக்கொண்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ், ராஜா ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக அவரை தடுத்தார்.
ஆனால் ராஜா நிற்காமல் சென்றதால் இன்ஸ்பெக்டர் காமராஜ் ஸ்கூட்டரில் விரட்டி சென்றார். பாய்லர் ஆலை ரவுண்டானா அருகே சென்றபோது, ராஜாவின் மோட்டார் சைக்கிளை காமராஜ் எட்டி உதைத்தார். இதில் கீழே விழுந்த உஷா சம்பவ இடத்திலேயே தலையில் அடிபட்டு இறந்தார்.
இதனைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று திரண்டு, இன்ஸ்பெக்டர் காமராஜை உடனே கைது செய்து, கொலை வழக்கு பதிவு செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
உஷா சாவுக்கு காரணமாக இருந்ததாக கூறி, அன்று இரவே பாய்லர் ஆலை போலீசார் இன்ஸ்பெக்டர் காமராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சாலை மறியல் போராட்டம் தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலை மறியல் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டு கடந்த புதன்கிழமை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் நேற்று திருச்சி மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் காமராஜ் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி, வக்கீல் மூலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனு நேற்று திருச்சி இரண்டாவது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி என்.லோகேஸ்வரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் சம்பத்குமார் ஆஜராகி, இன்ஸ்பெக்டர் காமராஜ் கொலை செய்யும் நோக்கத்தில் உஷாவை எட்டி உதைத்திருக்கிறார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்ற வேண்டும் என உஷாவின் கணவர் ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே இன்ஸ்பெக்டர் காமராஜுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதாடினார்.
திருச்சி வக்கீல் சங்க தலைவர் பன்னீர்செல்வன் உள்பட நிர்வாகிகள், மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் வக்கீல் ஆதிநாராயண மூர்த்தி ஆகியோரும் இன்ஸ்பெக்டர் காமராஜுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என மனு தாக்கல் செய்து வாதாடினார்கள். இதனைத்தொடர்ந்து காமராஜின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி லோகேஸ்வரன் உத்தரவிட்டார்.

Related Tags :
Next Story