குரங்கணி காட்டுத்தீ விபத்தில் தேடப்படும் சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளர் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்?
குரங்கணி காட்டுத்தீ விபத்தில் தேடப்படும் சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளர், வெளிநாட்டுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேனி,
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணிகள், கடந்த 11-ந்தேதி காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இதில், இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர். மேலும் சிலருக்கு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஈரோட்டில் இருந்து மலையேற்ற பயிற்சிக்கு சுற்றுலா பயணிகளை பேஸ்புக் (முகநூல்) மூலம் ஒருங்கிணைத்து அழைத்து வந்த, ஈரோடு சென்னிமலையை சேர்ந்த சுற்றுலா அலுவலக உரிமையாளர் பிரபு (வயது 30) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக சென்னையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஒருங்கிணைத்து அனுப்பியதாக கூறப்படும், சென்னை டிரெக்கிங் கிளப் உரிமையாளரான பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் வான் ஜியாட்டை பிடிக்க, சென்னையில் தனிப்படையினர் முகாமிட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும், பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தியும் வருகின்றனர். ஆனால், பீட்டர் வான் ஜியாட் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். அவர் தொடர்பாக போலீசார் நடத்தி வரும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, சென்னை டிரெக்கிங் கிளப் அமைப்பினர், இணையதளங்கள் மூலமாகவே பலரிடம் தொடர்பு கொண்டு வந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், இதில் உறுப்பினர்களாக இருப்பதாக தெரிகிறது. மேலும், பீட்டர் வான் ஜியாட்டுக்கு தற்போது பணியில் இருக்கும் வனத்துறை அதிகாரிகள் சிலருடனும், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரிகளுடனும் நட்பு இருப்பதாக விசாரணையில் தெரியவருகிறது. தலைமறைவாக இருக்கும் அவருக்கு யாரேனும் அடைக்கலம் கொடுத்து மறைத்து வைத்துள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையே அவர், வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, நேபாளம் வழியாக அவர் தப்பி செல்ல வாய்ப்பு இருப்பதாக போலீசார் கருதுகிறார்கள். இது தொடர்பான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story