பெரியகுளம் அருகே சேதமடைந்த தொகுப்பு வீடுகள் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு


பெரியகுளம் அருகே சேதமடைந்த தொகுப்பு வீடுகள் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு
x
தினத்தந்தி 17 March 2018 3:15 AM IST (Updated: 17 March 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

ஆதித்தமிழர் கட்சியின் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமையில், பொதுமக்கள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் ஒரு மனு அளித்தனர்.

தேனி,

பெரியகுளம் தாலுகா ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட டி.காமக்காபட்டியில் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 1994–ம் ஆண்டு அரசால் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இங்கு வசிக்கும் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் விவசாய கூலித்தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள தொகுப்பு வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. 10 வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனால் இரவில் தெருவில் படுத்து உறங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களுக்கு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story