தட்டப்பாறை கிராமத்தில் காளை விடும் திருவிழா


தட்டப்பாறை கிராமத்தில் காளை விடும் திருவிழா
x
தினத்தந்தி 17 March 2018 3:30 AM IST (Updated: 17 March 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அருகே தட்டப்பாறை கிராமத்தில் காளை விடும் திருவிழா நடைபெற்றது.

குடியாத்தம், 

குடியாத்தம், பரதராமி, கே.வி.குப்பம், ஆம்பூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 150 காளைகள் கொண்டு வரப்பட்டன. காளை விடும் வீதியின் இருபக்கமும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை நடத்தி அனுமதித்தனர்.

காளைவிடும் திருவிழாவை தனித்துணை ஆட்சியர் நாராயணன், தாசில்தார் பி.எஸ்.கோபி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன.

வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.40 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.30 ஆயிரமும், 4-வது பரிசாக ரூ.25 ஆயிரமும்வழங்கப்பட்டன.

காளைவிடும் திருவிழாவில் 35 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வருவாய் ஆய்வாளர் சத்யநாராயணன், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை தட்டப்பாறை, சின்னாலப்பல்லி ஊர் பொதுமக்கள், இளைஞரணியினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Next Story