ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
சென்னையில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கயத்தாறு,

ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி
கடம்பூர் நகர பஞ்சாயத்து 11 மற்றும் 12–வது வார்டுகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.9 லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறுடன் கூடிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது. அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
வரலாற்று சாதனை
தமிழக பட்ஜெட், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய பட்ஜெட்டாக உள்ளது. அதில் கல்வி, விவசாயம், சுகாதாரம் ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நடுநிலையாளர்களும் பாராட்டும் வகையில், வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பலர் புதிய கட்சியை தொடங்குவது போன்று, டி.டி.வி.தினகரனும் புதிய கட்சியை தொடங்கி உள்ளார். புதிய கட்சி தொடங்குவது அவரது விருப்பம். அவர் தனி கட்சி தொடங்கிய பின்னர் அ.தி.மு.க. தொண்டர்களை விமர்சிக்கக்கூடாது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக பதவிகளை துறந்த இயக்கம் அ.தி.மு.க.. தற்போதும் இதற்காக பாராளுமன்றம் முடங்கும் வகையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராடி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்பது மு.க.ஸ்டாலினின் கருத்து. அவர் 14 ஆண்டுகளாக மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தபோது ஏற்படாத ஞானோதயம் தற்போது அவருக்கு ஏற்பட்டு உள்ளது.
ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம்
அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல், காவிரி பிரச்சினையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னையில் மணிமண்டபம் அமைக்கும் பணிகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைப்பார்.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
பேட்டியின்போது, முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனம், தாசில்தார் முருகானந்தம், நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் ராதாகிருஷ்ணன், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் நாகராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கருப்பசாமி, மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story