தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 17 March 2018 3:00 AM IST (Updated: 17 March 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் நேற்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் நேற்று ஆய்வு செய்தார்.

ஆய்வு

தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு போலீஸ் குழும கூடுதல் டி.ஜி.பி. வன்னியபெருமாள், ஐ.ஜி. அருணாசலம் ஆகியோர் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தமிழ்நாடு முழுவதும் கடலோர பாதுகாப்பு போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்து வருகிறார்.

அதன்படி நேற்று அவர் தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி தருவைகுளம் போலீஸ்நிலையம், வெள்ளப்பட்டி சோதனைச்சாவடி, கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மீன்பிடி துறைமுகம், வ.உ.சி. துறைமுகம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் போலீஸ் நிலையம் கட்டுமான பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழிப்புணர்வு

தொடர்ந்து கடலோர கிராமங்களுக்கு சென்று மீனவ மக்களை சந்தித்து பேசினார். அப்போது, கடல் பகுதியில் பாதுகாப்பு மற்றும் பேரிடர் காலங்களில் மீனவர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அவசர கால உதவிக்கான எண் 1093 பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். புயல் எச்சரிக்கையை மீறி யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஆறுமுகநேரி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீஸ் குழும துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டான்லிஜோன்ஸ், இன்ஸ்பெக்டர் சைரஸ், சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜானகிராமன், வசந்தகுமார், செல்வக்குமார், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் டொமிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story