நயினார்கோவிலில் தபால் நிலையத்தில் கொள்ளை முயற்சி


நயினார்கோவிலில் தபால் நிலையத்தில் கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 17 March 2018 3:30 AM IST (Updated: 17 March 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

நயினார்கோவில் தபால் நிலையத்தின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நயினார்கோவில்,

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் கிராமத்தில் தபால் நிலையம் அமைந்துள்ளது. நேற்று காலை தபால் நிலைய கதவின் பூட்டு உடைக்கப்பட்டநிலையில் இருந்தது. இதை கண்ட அப்பகுதியினர் தபால் நிலைய அதிகாரி மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது தபால் நிலையத்தில் கொள்ளை அடிக்க பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பாதுகாப்பு பெட்டக அறையில் இரும்பு பெட்டியை உடைக்க முயன்று முடியாததால் திரும்பி சென்றது தெரியவந்தது.

மேலும் அங்கு அலாரம் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாததால் மர்ம நபர்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் நயினார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நயினார்கோவில் பகுதியில் தொடர்ந்து இதுபோன்று திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 

Next Story