மாணவர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடத்துவோருக்கு நிதி உதவி வழங்கப்படாத நிலை, மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் கண் பரிசோதனை முகாம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடத்துபவர்களுக்கு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மூலம் வழங்க வேண்டிய நிதிஉதவி வழங்கப்படாததால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மாவட்டம் முழுவதும் பல்வேறு சமூக சேவை சங்கங்கள் மற்றும் அமைப்புகள் அரசு சார்புடைய மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் ஒத்துழைப்புடன் பல்வேறு இடங்களில் கண் சிகிச்சை முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம்கள் நடத்தி வருகின்றன. இதன் மூலம் பள்ளி மாணவ, மாணவியரும் ஏழை எளிய மக்களும் பயன் பெற்று வருகின்றனர்.
விருதுநகர் ரோட்டரி சங்கம் கடந்த பல ஆண்டுகளாக விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச கண் கண்ணாடியை வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் பல்வேறு பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் குறைந்த பட்சம் 250 மாணவ, மாணவிகளுக்கு கண் கண்ணாடி வழங்கப்படுகிறது.
இதே போன்று பல்வேறு சமூக சேவை சங்கங்கள் முன்னணி கண் ஆஸ்பத்திரிகள் உதவியுடன் கண் சிகிச்சை முகாம் நடத்தி கண்புரை நோய் உள்ளவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யவும் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் மூலம் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
பள்ளிகளில் கண் பரிசோதனை முகாம் நடத்தி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்குவதற்கு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆண்டுதோறும் நிதி உதவி வழங்குவது உண்டு. ஆனால் 4 ஆண்டுகளாக இதற்கான நிதி உதவி எதையும் முகாம் நடத்தியவர்களுக்கு வழங்கப்படாத நிலை உள்ளது.
இதே போன்று கண் சிகிச்சை முகாம் நடத்தும் சமூக சேவை அமைப்புகளுக்கும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மூலம் எவ்வித உதவியும் கிடைக்காத நிலையே நீடிக்கிறது. இப்பிரச்சினை குறித்து ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. பார்வை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை ஊக்குவிக்க வேண்டிய பார்வை இழப்பு தடுப்பு சங்கம் அதற்கான நடவடிக்கைகளையும், நிதிஉதவிகளையும் முறையாக செய்யாதது ஏற்புடையது அல்ல. எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story