தனுஷ்கோடி கடல் பகுதியில் தடையை மீறி ஹெலிகேமராவில் படம் பிடித்த கர்நாடக சுற்றுலா பயணி, போலீசார் விசாரணை
தனுஷ்கோடி கடல் பகுதியில் தடையை மீறி ஹெலிகேமராவில் படம் பிடித்த கர்நாடக சுற்றுலா பயணியை போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்பட மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு காரணங்களுக்காக கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் ஹெலிகேமராவை வானில் பறக்க விட்டு வீடியோ, படம் பிடிப்பதற்கு காவல் துறையால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி சிலர் ஆள் நடமாட்டம் இல்லாத தனுஷ்கோடி கடற்ரையில் ஹெலிகேமராவை பறக்க விட்டு கடல் மற்றும் கடற்கரை, சாலை பகுதிகளையும் படம் பிடித்து செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து ஒரு காரில் சுற்றுலாபயணிகள் 4 பேர் வந்துள்ளனர். அதில் ஒருவர் எம்.ஆர்.சத்திரம் மற்றும் கம்பிபாடுக்கும் இடைப்பட்ட கடற்கரை பகுதிக்கு காரில் சென்று ஹெலிகேமராவை பறக்க விட்டு படம் பிடித்துகொண்டிருந்தார். அப்போது அங்கு சிறிய மீன் பிடி படகில் மீன் பிடித்து கரை திரும்பிய மீனவர்கள் ஹெலிகேமாரைவை வைத்து படம் பிடிக்காதீர்கள் போலீசார் பிடித்து விடுவார்கள் என எச்சரிக்கை செய்துள்ளனர். அப்போது தனுஷ்கோடி சாலையில் தூரத்தில் போலீசார் 2 பேர் ஓடி வருவதை கண்டதும் ஹெலிகேமராவுடன் இந்த சுற்றுலாபயணி காரில் ஏறி வேகமாக தப்பிச்சென்றுவிட்டார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story