எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல் தாள் தேர்வினை 10,907 மாணவ-மாணவிகள் எழுதினர்
அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல் தாள் தேர்வினை 10,907 மாணவ-மாணவிகள் எழுதினர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் 43 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி நடந்தது. முன்னதாக அனைத்து தேர்வு மையங்களிலும் காலை 9.30 மணியளவில் மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது.
அதில், மேல்நிலைக்கல்வியை தேர்வு செய்வதற்கான முன்னோட்ட தேர்வு எஸ்.எஸ்.எல்.சி. என்பதால் கவனமுடன் எழுத வேண்டும். மேலும் துண்டு சீட்டு வைத்திருத்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சில ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. தமிழ் முதல்தாள் தேர்வு என்பதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தேர்வினை எதிர்நோக்கி சென்றனர்.
தேர்வு அறைக்கு சென்ற மாணவ-மாணவிகளுக்கு விடைத்தாள், வினாத்தாள் வழங்கப்பட்டு சரியாக 10.15 மணிக்கு மணிசத்தம் ஒலித்ததும் 43 மையங்களிலும் தேர்வு தொடங்கியது. மாணவர்கள் ஆர்வத்துடன் எழுத ஆரம்பித்தனர். தேர்வு மையங்களுக்கு குடிநீர்வசதி, மின்சாரவசதி உள்ளிட்டவை மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வழிகாட்டுதலின் பேரில் கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் 43 மையங்களில் 165 பள்ளிகளைச் சேர்ந்த 11,090 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் 10,907 பேர் தேர்வு எழுதினர். 183 பேர் தேர்வு எழுத வரவில்லை. தனித்தேர்வர்கள் 277 மாணவ-மாணவியர்களில் 251 பேர் தேர்வு எழுதினர். 26 பேர் தேர்வு எழுத வரவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் கட்டுகள் கொண்டு செல்வதற்கும் தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் கட்டுகளை விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து வருவதற்கும் அரியலூர் கல்வி மாவட்டத்திற்கு 4 வழித்தட அலுவலர்களும், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்கு 6 வழித்தட அலுவலர்களும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி உள்பட கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது தேர்வு எழுதுவதில் மாணவ-மாணவிகளுக்கு சிக்கல் ஏதும் இருக்கிறதா? விடைத்தாள்-வினாத்தாளில் குளறுபடி ஏதும் உள்ளதா? என விசாரித்தனர்.
இதற்கிடையே தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஏதும் ஈடுகின்றனரா? என்பதை அறிய பறக்கும் படையினர் ஆங்காங்கே சுற்றி சுற்றி வந்து கண்காணித்தனர். சரியாக மதியம் 12.45 மணியளவில் தேர்வு முடிந்ததும் மாணவ, மாணவிகள் விடைத்தாளினை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்தனர்.
பின்னர் முதன் முதலாக அரசு பொதுத்தேர்வு எழுதிய அனுபவத்தை அவர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட னர்.

Related Tags :
Next Story