மக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அடுத்த பட்ஜெட்டை தாக்கல் செய்யும் டி.டி.வி.தினகரன் பேட்டி
மக்கள் ஆதரவோடு ஆட்சி அமைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அடுத்த பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
மதுரை,
மதுரையில் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழக சட்டசபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் குறிப்பிட்ட எந்த ஒரு அம்சமும் இல்லை. ஜி.எஸ்.டி. மூலம் தமிழகத்திற்கு எவ்வளவு இழப்பு என்பது குறித்தும் சொல்லவில்லை. கவர்னர் உரையில் ரூ.6 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் இருந்து வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதில் எவ்வளவு பெற்று உள்ளோம் என்பது குறித்து பட்ஜெட்டில் எந்த ஒரு தகவலும் இல்லை.
வெள்ளத் தடுப்புச்சுவர் கட்டப்போவதாக அறிவித்தது ஏமாற்று வேலை.
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடியும் நாங்கள் பிரதமர் சொல்லி தான் ஒன்று சேர்ந்தோம். பிரதமர் சொல்லி தான் துணை முதல்–அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன். இன்ஸ்பெக்டரில் இருந்து பதவி இறக்கம் செய்யப்பட்ட சப்–இன்ஸ்பெக்டராக ஆனேன் என்று அவர் தான் கூறுகிறார். அவ்வளவு நெருக்கமாக இருப்பதாக கூறுபவர்கள் தமிழ்நாட்டிற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து பிரதமரிடம் கூறி ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு செய்யலாம்.
தமிழகத்திற்கு ரூ.3½ லட்சம் கோடி நிதிச்சுமை இருக்கிறது என்பது தான் உண்மை. அதனை சரி செய்ய எந்த திட்டமும் இல்லை. மக்களுக்கு எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை. இந்த பட்ஜெட் ஏதோ ஒரு சம்பிரதாயத்திற்காக தாக்கல் செய்யப்பட்டது போல் உள்ளது. கணக்குப்பிள்ளை மாதிரி கணக்கை தாக்கல் செய்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். தென்சென்னை, வடசென்னையில் வெள்ளத் தடுப்புசுவர் கட்டுவோம் என்று கூறும் அறிவிப்பு நன்றாக தான் இருக்கிறது. இது குறித்து நிதி இருக்கிறதா என்று தெளிவாக தெரிவிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கிராமங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது. இதனை தீர்க்க நிரந்தர திட்டங்களும் இல்லை. வேலை வாய்ப்பை பெருக்க எந்த ஒரு அறிகுறியும் இல்லை.
இந்த பட்ஜெட் தான் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் ஆகும். மதுரை மீனாட்சி பட்டணத்தில் இருந்து நான் கூறுகிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மக்களின் ஆதரவோடு அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து அடுத்த பட்ஜெட்டை எங்கள் நிதி அமைச்சர் தாக்கல் செய்வார்.
பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். அவர்களுடன் இருப்பவர்களுக்கு பதவி கிடைக்கவில்லை. இன்னும் மனங்கள் இணையவில்லை. சும்மா 10 பேர் தான் இணைந்திருக்கிறார்கள். மதுரை அ.தி.மு.க.விற்கு ராசியான இடம். எனவே தான் நானும் இங்கு கட்சி பெயர், கொடியை அறிமுகம் செய்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story