விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொருட்கள் ஜப்தி
நெல்லையில் அரசு விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொருட்கள் ஜப்தி செய்யப்பட்டன.
நெல்லை,

அரசு ஊழியர் விபத்தில் பலி
பாளையங்கோட்டை செந்தில் நகரை சேர்ந்தவர் சுவாமி பிரசாத் (வயது 56). அரசு ஊழியரான இவர், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முத்திரை தாள் பிரிவில் தனித்தாசில்தாராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2008–ம் ஆண்டு வேலையை முடித்து விட்டு தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். பாளையங்கோட்டை ஊசி கோபுரம் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ், மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து அவருடைய மனைவி வசந்தி, மகன் மணிகண்டன், மகள் அனிதா ஆகியோர் ரூ.25 லட்சம் இழப்பீடு கேட்டு நெல்லை மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி, இழப்பீடாக ரூ.11 லட்சத்து 34 ஆயிரத்து 627–யை நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி
ஆனால் அந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து நிறைவேற்றுதல் மனு செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நீதிபதி ராஜசேகர் விசாரணை நடத்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பொருட்களை “ஜப்தி“ செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து கோர்ட்டு ஊழியர்கள் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தின் 5 குளிர்சாதன எந்திரங்கள், 33 நாற்காலிகள், 11 கம்ப்யூட்டர்கள் போன்ற பொருட்களை நேற்று ஜப்தி செய்தனர்.

Related Tags :
Next Story