கடையம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது


கடையம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
x
தினத்தந்தி 17 March 2018 2:00 AM IST (Updated: 17 March 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடையம்,

கடையம் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் 2பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தொழிலாளி கொலை

கடையம் அருகில் உள்ள ராயப்பநாடானூரை சேர்ந்தவர் ஜெயமுருகன். இவர் திருப்பூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த பொங்கல் பண்டிகை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

சம்பவத்தன்று அவர், பக்கத்து கிராமமான வெங்கட்டாம்பட்டியில் உள்ள மதுபான கூடத்தில் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வெள்ளப்பனையேரிபட்டியை சேர்ந்த 3 வாலிபர்களுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், 3 பேரும் சேர்ந்து அவரை தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

பலத்த காயம் அடைந்த ஜெயமுருகன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏற்கனவே வெள்ளப்பனையேரிபட்டியை சேர்ந்த முகேஷ் என்பவரை கைது செய்தனர்.

மேலும் ஒருவர் கைது

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடிவந்தனர். நேற்று கோவில்பட்டியில் பதுங்கி இருந்த வெள்ளப்பனையேரிபட்டி கீழத்தெரு தங்கராஜ் மகன் மாரிமுத்து(27) வை கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story