பொது சேவை மையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியம்: கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்


பொது சேவை மையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்வது அவசியம்: கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 17 March 2018 5:00 AM IST (Updated: 17 March 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் உள்ள பொது சேவை மையங் களில் அதிகாரிகள் மாதம் ஒருமுறையாவது ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தி உள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள பொதுசேவை மையத்தில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்குள்ள ஊழியர்களிடம் சேவை மையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கேட்டு அறிந்தார். மேலும் பொதுசேவை மையம் சிறப்பாக செயல்படுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

இதுதொடர்பாக கவர்னர் கிரண்பெடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தங்கள் பகுதியில் பொதுசேவை மையங்கள் எங்கு இருக்கிறது என்பதை உள்ளூர் மக்கள் நன்கு தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுசேவை மையத்தின் சேவை குறித்து தங்களது கருத்துக்களை பொதுமக்கள் தெரிவிக்க வாய்ப்பு வழங்க வேண்டும்.

பொதுசேவை மையத்தின் பயன்பாட்டை மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், மாணவ-மாணவிகள் பிரபலப்படுத்த வேண்டும். அதிகமான சேவைகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை சேவை மையங்கள் மூலமாக வழங்க முடியும். பொதுசேவை மையங்களின் பட்டியல்கள், அவை எந்த பகுதிகளில் உள்ளன என்பதை ஜியோ டேக்கிங் தொழில்நுட்ப அடிப்படையில் பொதுமக்கள் எளிதில் கண்டறியும் வகையில் அரசு இணையதளங்களில் வெளியிட வேண்டும். பொது சேவை மையங்களில் மாதம் ஒரு முறையாவது அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story