புதுக்கோட்டை மாவட்டத்தில் 23,432 மாணவ, மாணவிகள் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 23,432 மாணவ, மாணவிகள் எழுதினர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய 2 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள 166 பள்ளிகளை சேர்ந்த 13 ஆயிரத்து 627 மாணவ, மாணவிகளும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் உள்ள 150 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 96 மாணவ, மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 723 மாணவ, மாணவிகள் நேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல் தாளை புதுக்கோட்டை மாவட்டத்தில் 23 ஆயிரத்து 432 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும் 291 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிரகதாம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 57 தேர்வு மையங்கள், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் அறந்தாங்கி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள 46 தேர்வு மையங்கள் என மொத்தம் 95 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.
இதில் அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தேர்வு மையங்களை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்கு உதவும் பொருட்டு சொல்வதை எழுதும் ஆசிரியர்கள் 75 பேர் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
தேர்வுகளில் மாணவ, மாணவிகள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களாக 1,226 பேரும், பறக்கும் படையினர் 145 பேரும், முதன்மை கண் காணிப்பாளர்கள் 103 பேரும் மற்றும் துறை அலுவலர்கள் 103 பேரும் என மொத்தம் 1,577 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, தடையின்றி மின்சார வசதி உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

Related Tags :
Next Story