மேயர், துணை மேயர் முன்னிலையில் பெங்களூருவில் முறைகேடான சுவரொட்டி, விளம்பர பலகைகள் அகற்றம்
மேயர், துணை மேயர் முன்னிலையில் பெங்களூருவில் முறைகேடான சுவரொட்டி மற்றும் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன.
பெங்களூரு,

விளம்பர பலகைகள் அகற்றம்
பெங்களூருவில் அனுமதி பெறாமல் முறைகேடாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டது. இதன்படி சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்றுவது என்று அந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி மேயர் சம்பத்ராஜ், துணை மேயர் பத்மாவதி நரசிம்மமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பெங்களூரு மினர்வா சர்க்கிளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை நேற்று அகற்றினர். மரங்களில் போடப்பட்டிருந்த சிறிய அளவிலான விளம்பர பலகைகளும் அகற்றப்பட்டன.
நடவடிக்கை எடுக்கப்படும்
மேலும் மேயர் சம்பத்ராஜ், சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளையும் கிழித்து அகற்றினார். இத்தகைய சுவரொட்டிகள் நகரின் அழகை கெடுப்பதாகவும் அவர் கூறினார். மரங்கள், மின் கம்பங்களில் தொலைபேசி எண்களை வைத்திருப்பவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்றும் மேயர் கூறினார்.
இதுகுறித்து மேயர் சம்பத்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில், “கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதால் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள விளம்பல பலகைகள் அகற்றப்படுகிறது. அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 198 வார்டுகளிலும் இதுபற்றி ஆய்வு நடத்தி விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது“ என்றார்.

Related Tags :
Next Story