பணம் பெற்று ஒப்பந்ததாரர்களுக்கு டிக்கெட் வழங்குவதாக கருத்து வீரப்பமொய்லி டுவிட்டர் பதிவால் காங்கிரசில் பரபரப்பு
பணம் பெற்று ஒப்பந்த தாரர்களுக்கு டிக்கெட் வழங்குவதாக கூறி வீரப்பமொய்லி டுவிட்டரில் வெளியிட்ட பதிவால் காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
பணம் பெற்று ஒப்பந்த தாரர்களுக்கு டிக்கெட் வழங்குவதாக கூறி வீரப்பமொய்லி டுவிட்டரில் வெளியிட்ட பதிவால் காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கருத்தால் சித்தராமையா உள்பட கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி
கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க ஆளும் காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அடுத்த ஓரிரு வாரங்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக காங்கிரஸ் தேர்தல் குழு தலைவருமான வீரப்பமொய்லி எம்.பி. நேற்று தனது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “அரசியலில் பண பிரச்சினையை அகில இந்திய காங்கிரஸ் தீர்க்க வேண்டியது அவசியம். ஒப்பந்ததாரர்களுடன் தொடர்புடைய மாநில பொதுப்பணித்துறை மந்திரி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தீர்மானிக்கிறார். டிக்கெட்டுக்கு பணம் செலுத்தும் பலம் எங்களுக்கு இல்லை“ என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி
இது கர்நாடக காங்கிரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்தால் சித்தராமையா உள்பட காங்கிரஸ் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த வீரப்பமொய்லி, “மந்திரி மகாதேவப்பாவுக்கு ஒப்பந்ததாரர்களுடன் தொடர்பு என்ற எந்த பதிவையும் நான் வெளியிடவில்லை. எனது மகன் கூட இதை செய்திருக்க சாத்தியம் இல்லை. யாரோ என்னுடைய டுவிட்டர் கணக்கில் திருட்டுத்தனமாக புகுந்து இவ்வாறு தவறான தகவலை வெளியிட்டுள்ளனர். உடனே அந்த தகவலை நீக்குவேன்“ என்றார்.
எடியூரப்பா கருத்து
வீரப்பமொய்லியின் டுவிட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, “கடைசியில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் தனது மனசாட்சிப்படி கருத்து தெரிவித்து உள்ளார். வீரப்பமொய்லி கூறியது சரியானது. சித்தராமையா அரசு 10 சதவீத ‘கமிஷன்‘ அரசு என்று நாங்கள் நீண்ட நாட்களாக சொல்லி வருகிறோம். பொதுப்பணித்துறை மந்திரியின் பாக்கெட்டில் பணம் கொட்டுவதால், மாநிலத்தின் கஜானா நிரம்பவில்லை. சாலைகள் மோசமாக உள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவரின் கருத்து எங்களின் புகாரை உண்மை என நிரூபித்து உள்ளது“ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் மத்திய மந்திரி சதானந்தகவுடா, பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி., பிரதாப்சிம்ஹா எம்.பி. ஆகியோரும் சித்தராமையாவை விமர்சித்து டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

Related Tags :
Next Story