ராகுல்காந்தி 24-ந்தேதி சாம்ராஜ்நகருக்கு வருகை புட்டரங்கஷெட்டி எம்.எல்.ஏ. தகவல்


ராகுல்காந்தி 24-ந்தேதி சாம்ராஜ்நகருக்கு வருகை புட்டரங்கஷெட்டி எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 17 March 2018 3:15 AM IST (Updated: 17 March 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

வருகிற 24-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சாமராஜ்நகருக்கு வருகை தர உள்ளார் என்று புட்டரங்கஷெட்டி எம்.எல்.ஏ. கூறினார்.

கொள்ளேகால்,

வருகிற 24-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சாமராஜ்நகருக்கு வருகை தர உள்ளார் என்று புட்டரங்கஷெட்டி எம்.எல்.ஏ. கூறினார்.

ராகுல் காந்தி வருகை

சாம்ராஜ்நகர் டவுனில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாவட்ட காங்கிரஸ் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட புட்டரங்கஷெட்டி எம்.எல்.ஏ. பேசியதாவது:-

வருகிற 24-ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சாம்ராஜ்நகருக்கு வருகை தருகிறார். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால், மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து அறிந்து கொள்ள ராகுல் காந்தி வருகிறார். மேலும் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சாலை மார்க்கமாக பிரசார வாகனத்தில் சென்று மக்களிடையே உரையாற்றுகிறார். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

சாலை பராமரிப்பு


இந்தநிலையில், ஜெயண்ணா எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் சேர்ந்து ராகுல் காந்தி சாலை மார்க்கமாக பயணம் செய்ய உள்ள பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். இதையடுத்து அவர் கூறியதாவது:-

ராகுல் காந்தி சாமராஜ்நகர் மாவட்டத்தில் சந்தேமரஹள்ளியில் இருந்து எலந்தூர் வரை சாலை மார்க்கமாக பிரசார வாகனத்தில் சென்று மக்களை சந்திக்கிறார். பின்னர், நாடமேகலாம்பா கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து எரியூருக்கு செல்கிறார். இதனால் அந்த சாலைகளில் பராமரிப்பு பணிகளை விரைவு படுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story