நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு சிவசேனா ஆதரவு அளிக்காது முதல்-மந்திரி பட்னாவிஸ் நம்பிக்கை


நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு சிவசேனா ஆதரவு அளிக்காது முதல்-மந்திரி பட்னாவிஸ் நம்பிக்கை
x
தினத்தந்தி 17 March 2018 4:00 AM IST (Updated: 17 March 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சிவசேனா ஆதரவு அளிக்காது என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பை,

நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சிவசேனா ஆதரவு அளிக்காது என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை இல்லா தீர்மானம்


ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று தெலுங்குதேசம் கட்சி வலியுறுத்தி வருகிறது. அக்கட்சியின் கோரிக்கையை ஏற்க மத்திய பா.ஜ.க. அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதனால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி விலகியது.

இந்தநிலையில் மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர இருப்பதாக தெலுங்குதேசம் கட்சி அறிவித்து உள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா மீது அதிருப்தியில் உள்ள கூட்டணி கட்சியான சிவசேனாவும், தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து நேற்று நிருபர்கள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

ஆதரவு அளிக்க மாட்டார்கள்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயிடம் இதுகுறித்து தற்போது வரை எதுவும் பேசவில்லை. எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள்(மத்திய பா.ஜனதா தலைவர்கள்) அதை செய்வார்கள். இந்துத்வா கொள்கையின் வலிமை எங்களை ஒரே அணியில் வைத்திருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர்கள்(சிவசேனா) தெலுங்கு தேசம் கட்சியின் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள்.

சிவசேனா தலைவர்கள் சிலர் காலையில் என்னை சந்தித்து மாநகராட்சி இடைத்தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டனர். நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம்.

இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

Next Story