மும்பையில் நாளை முதல் வாடகை கார் டிரைவர்கள் வேலை நிறுத்தம்
மும்பையில் நாளை முதல் வாடகை கார் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மும்பை,

வேலை நிறுத்த போராட்டம்
உபேர், ஒலா நிறுவனங்களை கண்டித்து, அதற்கு கார்களை இயக்கி வரும் டிரைவர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் மும்பை, டெல்லி, ஐதராபாத், புனே போன்ற நகரங்களில் நடைபெறும் என கூறப்படுகிறது. இது குறித்து போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் நாயக் கூறியதாவது:-
உபேர், ஒலா நிறுவனங்கள் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பின்பற்ற தவறிவிட்டன. அந்த நிறுவனத்தை நம்பி நாங்கள் ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை முதலீடு செய்தோம். ஆனால் உறுதி அளித்ததில் இருந்து பாதி வருமானம் கூட தற்போது கிடைப்பதில்லை. நிறுவனங்களின் தவறான அணுகுமுறையால் தான் நாங்கள் குறைந்த வருமானத்தை பெற்று வருகிறோம்.
கடும் நடவடிக்கை வேண்டும்
உபேர், ஒலா நிறுவனத்தினர் அவர்களின் சொந்த வாகனங்களுக்கு தான் அதிக முன்னுரிமை கொடுக்கின்றனர். இதனால் எங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது. பலமுறை கோரியும் எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். மேலும் இந்த பிரச்சினை குறித்து நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயை சந்திக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில் விதிமுறை மீறி செயல்படும் தனியார் வாடகை கார் நிறுவனங்கள் மீது போக்குவரத்து துறை கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மும்பை டாக்சி டிரைவர்கள் சங்க பொதுச்செயலாளர் அல் குவாத்ரோஸ் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story