தஞ்சையில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரம்
திருச்சி-காரைக்கால் இடையே ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்காக தஞ்சையில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டம் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. உலக புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகம் தஞ்சையில் அமைந்து உள்ளது.
தஞ்சைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் கோவில் நகரமான கும்பகோணத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். தற்போது தஞ்சை வழியாக 30-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும், 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சை-திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து தண்டவாளங்கள் இணைக்கப்பட்டு வருகிறது. இரட்டை ரெயில் பாதையில் வருகிற 28-ந் தேதி முதல் ரெயில்களை இயக்க திட்ட மிடப்பட்டுள்ளது.
மேலும் ரெயில் போக்கு வரத்தை விரைவுபடுத்தவும், செலவுகளை குறைக்கவும் திருச்சி-தஞ்சை-திருவாரூர்- நாகை-வேளாங்கண்ணி இடையே உள்ள 156 கிலோ மீட்டர் தூரத்தை மின்மயமாக்குவதற்கு ரூ.227 கோடியே 26 லட்சத்தை ரெயில்வே அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.
இதையடுத்து திருச்சி- காரைக்கால் இடையேயுள்ள ரெயில் பாதையை மின்மயமாக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரெயில் பாதையின் இருபுறமும் மின்கம்பங்களை நடுவதற்காக கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் முடிவடைந்தவுடன் மின்கம்பிகள் பொருத்தப்படும். ரெயில்கள் இயக்குவதற்கு தேவையான மின்சாரத்தை பெறுவதற்காக தஞ்சை, சோளகம்பட்டி, பூதலூர், கோவில்வெண்ணி, திருவாரூர், நாகை போன்ற இடங்களில் துணை மின்நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
தஞ்சையில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் எதிரில் ரெயில்வே துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் வசித்து வந்த தொழிலாளர்கள் ஏற்கனவே வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இப்போது இப்பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு தேவையான மின்மாற்றிகள் உள்ளிட்ட எலக்ட்ரிக் பொருட்கள் கொண்டு வந்து இறக்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் துணை மின் நிலையத்திற்கு தேவையான கட்டிட பணிகளும் நடைபெற்று வருகின்றன. மின்மயமாக்கும் பணிகளை இந்த ஆண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story