தேசிய மாணவர் படை முகாம்கள்
தேசிய மாணவர் படை எனும் என்.சி.சி.யில் ராணுவம், கப்பல் படை, விமானப் படை ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன.
துப்பாக்கி சுடுதல், தடைகளைத் தாண்டிச் செல்லுதல், வரைபடத்தை படித்து வழிகண்டறிதல் போன்றவை பொதுவான அடிப்படை பயிற்சிகள். அனைத்திலும் சிறப்பாகச் செயல்படுபவர்கள் முகாம்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முகாம்கள் இந்தியா முழுவதும் பல இடங்களில் நடைபெறும். பிற ஊர்களுக்கு நண்பர்களுடன் பயணித்து முகாமில் பயிற்சி எடுப்பது நல்ல நினைவுகளைத் தரும்.
எந்தச் சவாலை சந்திக்கும்போதும் நண்பர்கள் உடன் இருப்பதால் அது ஊக்கம் தரும். எதையும் ஒற்றுமையாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். குடியரசு தின விழாவுக்கான முகாம் மிகவும் சிறப்பானது. திறமையையும் அணிவகுப்பு செய்யும் முறையையும் கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் தமிழகம் சார்பாக டெல்லியில் குடியரசு தினத்தன்று அணிவகுப்பு செய்வார்கள். அந்த அணிவகுப்பில் தேர்வாகி கலந்துகொள்வதே என்.சி.சி.யில் கவுரவமாகக் கருதப்படும்.
இது மட்டுமல்லாமல் தலைமைப் பண்பு முகாம், துப்பாக்கி சுடுதலுக்கான முகாம் என மாணவர்களின் பண்புகளையும் திறனையும் மேம்படுத்துவதற்கான முகாம்கள் பிரத்யேகமாக அமைக்கப்படும். தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்த தேசிய ஒருமைப்பாடு முகாம் நடைபெறும். அதில் மாணவர்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் பங்குபெறுவார்கள். பயிற்சி முடிந்து டென்டுக்குள் வந்து படுத்தால் அலுப்புக்குக் கொசுத் தொல்லைகூட பெரிதாக தெரியாது என்கிறார்கள் மாணவர்கள்.
என்.சி.சி.யில் மற்றொரு உன்னதமான முகாம்தான் என்.சி.சி. மாணவர்கள் பரிமாற்றத் திட்டம். இதில் இந்தியா தன் நட்பு நாடுகளுடன் சிறந்த மாணவர்களை பரிமாறிக்கொள்ளும். இந்த முகாம் மற்ற நாட்டின் ராணுவப் பயிற்சி களையும் இயங்கும் தன்மையையும் அறிய சிறந்த வாய்ப்பாக அமையும். சவால்கள் நிறைந்திருக்கும் என்.சி.சி.யில் சாகசங்கள் இல்லாமல் இருக்குமா? அதற்கெனத் தனி முகாம்கள் உள்ளன. அவற்றில் மலை ஏறுதல், பாரா ஜம்பிங், பாரா கிளைடிங், படகு செலுத்துதல் போன்ற சாகசங்கள் இடம்பெறும். இது தவிர்த்து தடகளப் போட்டிகளும் பிற விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும். இப்படிப் பல நல்ல அனுபவங்களை அளிக்கும் என்.சி.சி. மூலம் ராணுவத்திலோ கப்பல் படையிலோ விமானப்படையிலோ சேர முடியும். அதற்கு என்.சி.சி. ‘சி’ சான்றிதழ் மட்டும் இருந்தால் போதும்.

Related Tags :
Next Story