மரப் பொருட்களை உருவாக்கும் ‘ரோபோ தச்சர்’
அமெரிக்க விஞ்ஞானிகள், ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தானியங்கி முறையில் மரப் பொருட்களை உருவாக்கும் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், தற்போதுள்ள ரோபோட்டிக் தொழில்நுட்பத்தையும், ரூம்பா என்ற தரையைச் சுத்தம் செய்யும் ரோபோவில் சில மாற்றங்கள் செய்தும் புதிய ‘தச்சர் ரோபோ’வை உருவாக்கியுள்ளனர்.
தங்களது கண்டுபிடிப்பு, மனித தச்சர்களுக்கு மாற்றாக உருவாக்கப்படவில்லை என்றும், இது தச்சர்கள் வடிவமைப்பு போன்ற முக்கியமான விஷயங்களில் அதிக கவனத்தைச் செலுத்துவதற்குப் பயன்படும் என்றும் புதிய ரோபோவை உருவாக்கிய குழு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ரோபோவானது பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகளை வெகுவாகக் குறைக்கும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
“ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான தச்சர்கள் மரங்களை அறுக்கும் பணியில் ஈடுபடும்போது தவறுதலாக தங்களது கைகளிலும், விரல்களிலும் காயம் அடைகின்றனர்” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
“எங்களின் செயல்முறையில், நிபுணரல்லாதோர் கூட பல்வேறுபட்ட பொருட்களைக் கொண்டு வடிவத்தை நிர்மாணித்து அதை ரோபோக்களின் உதவியோடு உருவாக்க முடியும்” என்று ‘ஆட்டோசா’ என்ற இந்த ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை மிகப் பெரிய மரப் பொருட்களைத் தயாரிப்பதற்கு மட்டுமே தானியங்கி அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது எம்.ஐ.டி.யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள இந்தப் புதிய ரோபோவின் மூலம் தனிப்பட்ட தேவைகள் மற்றும் வேறுபட்ட வடிவங்களைக் கொண்ட மரப் பொருட்களைத் தயாரிப்பதற்கும் வழி ஏற்பட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்பம் மாற்றியமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் மரங்களை சரியான துண்டுகளாக வெட்டுவதுடன், அவற்றை இணைப்பதற்குரிய துளைகளையும் இட்டு, அதன் பாகங்களை எளிதாக இணைக்கும் வகையில் அறையில் வகைப்படுத்தி வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது தச்சர்களால் பயன்படுத்தப்படும் தானியங்கிகளுடன் ஒப்பிடும்போது, ‘ஆட்டோசா’ என்றழைக்கப்படும் இவை, விலை மலிவானவை என்பதுடன், பயன்படுத்துவதற்கு எளிதானதும் ஆகும். ஜெர்மனியைச் சேர்ந்த குக்கா என்ற நிறுவனத்தின் ரூம்பா உள்ளிட்ட இரண்டு ரோபோக்களை இந்த ஆராய்ச்சிக்குழு பயன்படுத்தியது.
புதிய தச்சர் ரோபோவை உருவாக்கிய ரஸ் மற்றும் அவரது குழுவினர் கடந்த 2004-ம் ஆண்டு அமைக்கப்பட்ட எம்.ஐ.டி.யின் கணினி அறிவியல் மற்றும் நுண்ணறிவுத் திறன் ஆய்வகத்தைச் சேர்ந்தவர்கள்.
இதுவரை, ரோபோக்களானது நாற்காலிகள், மேஜைகள் போன்ற பல்வேறு மர உபகரணங்களை உருவாக்குவதற்குரிய மரத்தை கணக்கிட்டு வெட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், அவற்றை இணைத்து இறுதியான பொருளை உருவாக்கும் செயல்முறை, மனிதர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதிய ரோபோவால் அந்த நிலை மாறும்.
அவரவர் தமது தனித்த தேவைக்கான மரப் பொருட்களை உருவாக்க எளிதான வழி அமைத்துக் கொடுப்பதே தங்களின் நோக்கம் என்று எம்.ஐ.டி. விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Related Tags :
Next Story