ஹாங்காங்கில் உருவாகப்போகும் ‘குழாய் வீடுகள்’
உலகில் ஜனநெருக்கடி மிகுந்த பெரு நகரங்களில் ஒன்றான ஹாங்காங்கில், ‘டியூப் வீடுகள்’ எனப்படும் ‘குழாய் வீடுகளை’ உருவாக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்படுகிறது.
மொத்தம் 106 சதுர கிலோமீட்டர் பரப் பளவு கொண்ட ஹாங்காங்கின் மக்கள்தொகை 74 லட்சமாகும். எனவே, அங்கு மக்களுக்கான குடியிருப்புப் பிரச்சினை ஏற்படுகிறது, வீடுகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது. எனவே சாதாரண ஹாங்காங்வாசிகளுக்கு சொந்த வீடு என்பது கனவாகி வருகிறது.
இந்த முக்கியமான பிரச்சினைக்கு ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு கட்டிட வடிவமைப்பாளர் தீர்வுகாண முற்பட்டுள்ளார். கான்கிரீட்டால் ஆன குழாய்களை சிறிய வீடு களாக அமைப்பதன் மூலம் இப்பிரச் சினைக்கு படிப்படியாக விடைகொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
இந்தக் குழாய் வீடுகள் தொலைவில் இருந்து பார்ப்பதற்கு கட்டிட வேலை நடைபெறும் பகுதியைப் போன்று தோன்றினாலும், ஹாங்காங்கின் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் எனக் கருதப்படுகிறது.
மலிவு வீடுகளை உருவாக்கும் பல முயற்சிகள் ஹாங்காங்கில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், சில கட்டிட வடிவமைப்பாளர்கள் ‘நானோ வீடுகள்’ எனப்படும் மிகச் சிறிய வீடுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்படிப்பட்ட, ஒரு வாகன நிறுத்தும் இடத்தைவிடச் சிறிய 121 சதுர அடி கொண்ட ஒரு வீடு சமீபத்தில் பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக் கிறது.
இப்படி மிகச் சிறிய வீடுகளுக்கும், வணிக வளாகங்களுக்கும் பெயர்பெற்ற நகராக ஹாங்காங் மாறிவருகிறது என்று அந்நகரத்தைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பாளர் ஜேம்ஸ் லா கூறுகிறார். “ஹாங்காங்கில் சூரிய வெளிச்சம், சரியான காற்றோட்டம் இல்லாத, மிகவும் சிறிய அளவிலான வீடுகள் வெறும் 50 சதுர அடிகளில் கட்டப்படுகின்றன. மக்களால் ஒரு சாதாரண வீட்டுக்கு உரிய வாடகையை அளிக்கமுடியாது என்பதால், வீட்டு உரிமையாளர்கள் ஒரு வீட்டை பல சிறுபகுதிகளாகப் பிரித்து வாடகைக்கு விடுகிறார்கள்” என்று அவர் கூறுகிறார்.
இந்த வீட்டு வசதியைக்கூட எட்டமுடியாத ஆயிரக்கணக்கான மக்கள், வேறு வழியின்றி கிட்டத்தட்ட கூண்டு போன்ற, வெறும் 16 சதுர அடி கொண்ட இடத்தைத் தமது வீடுகளாகக் கொண்டுள்ளனர்.
“கூண்டுகளைப் போன்ற இதுபோன்ற வீடுகள் மூன்று நிலைகளைக் கொண்ட படுக்கை அமைப்பைப் போல இருக்கும். உங்கள் வீட்டுக்கு உரிய பாதுகாப்பையும், தனியுரிமையையும் அளிக்கும்விதமாக உங்களது வீட்டைச் சுற்றி கம்பி வேலி போன்று அமைக்கப்பட்டிருக்கும். அதாவது, ஒரு குட்டி சிறையைப் போல அது காட்சியளிக்கும். இது முற்றிலும் மோசமான வாழ்க்கை” என்றும் ஜேம்ஸ் சொல்கிறார்.
ஹாங்காங்கில் மிகச் சிறிய வீடுகளுக்கும் அதிக வாடகையை அளிக்க வேண்டியுள்ளது. பாதியாகப் பிரிக்கப்பட்ட 50 முதல் 100 சதுர அடி கொண்ட ஒரு வீட்டுக்கு மாதத்துக்கு சுமார் 300 முதல் 600 டாலர்களை வாடகையாகக் கொடுக்க வேண்டியுள்ளது. மனித கூண்டுகளைப் போன்ற வீடுகளுக்குக்கூட மாத வாடகையாக சுமார் 300 டாலர்களை செலுத்த வேண்டியுள்ளதாக அவர் கூறுகிறார்.
எனவே, இந்நிலைக்கு தீர்வுகாணும் வழியை ஜேம்ஸ் பார்க்கிறார். அவரைப் போன்ற கட்டிட வடிவமைப்பாளர்கள் ஒரு வீட்டில் மீதமிருக்கும் இடத்தை பயன்படுத்த முயல்கிறார்கள்.
அந்த முயற்சிகளில் ஒன்றுதான், ‘ஓபாட்’ என்னும் கான்கிரீட் குழாய்களைக் கொண்டு உருவாக்கப்படும் மிகச் சிறிய வீடுகள். இதுபோன்ற குழாய்கள் ஒன்றன் மீது ஒன்றாக வைக்கப்படும்போது பயன்படுத்தப்படாத இடைவெளிகள் வீணாவது தவிர்க்கப்படுகிறது. மேலும், கோபுரம் போன்ற அடுக் கடுக்கான வீடுகளை விரைவாகக் கட்டுவதற்கான வாய்ப்பையும் இம்முறை உருவாக்குகிறது.
இந்த வீடுகளை அமைப்பதற்கு உபயோகிக்கப்படும் குழாய்கள் பொதுவாக மழைநீர் வடிகால் குழாய்களாகப் பயன்படுத்தப்படுபவை. அதிக அளவில் வாங்கப்படும் இதுபோன்ற மிகப் பெரிய குழாய்கள் ஒருகட்டத்தில் தேவையற்றதாகக் கருதி வீணாகப் போடப்படுகின்றன. அவற்றை குறைந்த தொகையைக் கொடுத்து ஒப்பந்ததாரர்களிடம் இருந்து வாங்குவதுடன், மேலும் சிறிது பணத்தைச் செலவழித்து மரச்சாமான்கள், குளியலறை, சமையலறை, சோபா, படுக்கை போன்றவற்றை அமைத்தால் ஒரு வீடு உருவாகிவிடும்” என்று ஜேம்ஸ் சொல்கிறார்.
எதிர்காலத்தில் மாற்றியமைக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு நவீன பாணியிலான வீடுகளாக இந்த ‘ஓபாட்கள்’ உள்ளன. ஆனால், ஹாங்காங்கின் வீட்டுப் பிரச்சினைக்கு இது நிரந்தரத் தீர்வல்ல என்று ஜேம்ஸ் ஒப்புக்கொள்கிறார்.
ஹாங்காங்கில் வீடுகளின் விலையும் வாடகையும் அதிகமாக இருப்பதற்கு இடப் பற்றாக்குறை ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும், இந்தப் பிரச்சினைக்கு இது மட்டுமே காரணமல்ல என்கிறார் அவர்.
“ஹாங்காங் ஒரு மிகப் பெரிய நகரம். இந்நிலையில், நமக்குத் தேவையான அளவு நிலம் இல்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை. மாபெரும் குடியிருப்புகளை கட்டியெழுப்பத் தேவையான பெரிய நிலப்பகுதி நமக்கு இல்லை என்பது உண்மை. ஆனால் அதற்குத் தேவையான நிலப்பகுதியை நாம் கடலில் இருந்து உருவாக்கலாம்.
தற்போதைய நகரத்திலும், உண்மையாகவே பயன்படுத்தப்படாத நிலம் அதிகளவில் இருப்பதை நம்மால் காண முடியும். பல்லாண்டுகளாகவே மேம்பாலங்களுக்கு கீழும், கட்டிடங்களை ஒட்டியும் நிலங்கள் பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன” என்கிறார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “நகர்ப்புறக் கட்டமைப்புக்குத் திட்டமிடுபவர்கள், வருங்காலத்தில் நகரத்தை எவ்வாறு முன்னேற்றுவது என்பது குறித்தும், பிளவுகள் மற்றும் எஞ்சியுள்ள இடைவெளிகளில் ஓபாட் போன்ற வீடுகளை அமைப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என்றும் ஹாங்காங் கட்டிட வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.
மெகா நகரமான ஹாங்காங்கில் வாழ்க்கையை நடத்துவதற்கான அன்றாடச் செலவினங்கள் கூடிக்கொண்டே செல்கின்றன. ஆனால் அந்த வேகத்தில் சம்பளம் உயர்வதில்லை.
இந்நிலையில், அங்கு சாதாரண மக்கள் தங்களுக்கு என்று ஓர் இடத்தைக் கண்டுபிடிக்க தொடர்ந்து போராடத்தான் வேண்டும். ‘கூண்டுகளுக்குள்’ வாழும் மக்களின் மனக்குமுறல்களை யார் உணர்வார்கள்?

Related Tags :
Next Story