‘இனி எந்த கட்சி கொடியையும் கையில் ஏந்த மாட்டேன்” தினகரன் கட்சியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்
டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று நாஞ்சில் சம்பத் அறிவித்தார். அவர் அளித்த பேட்டியில், “இனி எந்த கட்சி கொடியையும் கையில் ஏந்த மாட்டேன்“ என்று கூறினார்.
கன்னியாகுமரி,
ஜெயலலிதாவால் அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டவர், நாஞ்சில் சம்பத். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் மதுரை மேலூரில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்‘ என்ற கட்சியை தொடங்கி, ஜெயலலிதா படத்துடன் புதிய கொடியையும் அறிமுகம் செய்தார். அந்த விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொள்ளவில்லை. அவர் அதிருப்தியில் இருப்பதாக கருதிய தினகரன் ஆதரவாளர்கள், அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.
இந்த நிலையில், நாஞ்சில் சம்பத் தனது சொந்த ஊரான குமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த மணக்காவிளையில் உள்ள இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் ஆராதித்து மகிழ்ந்த தலைவன் டி.டி.வி.தினகரன். அவர் கூட்டிய புதிய கட்சியின் பெயர் சூட்டு விழாவுக்கு நான் போகவில்லை. என்னால் போக முடியவில்லை. குரங்கணி தீ விபத்தில் என்னுடைய உறவினர் இறந்த துக்கத்தில் நான் இருந்தேன். இதனால் மேலூர் விழாவில் நான் பங்கேற்கவில்லை. தினகரன் தனது கட்சிக்கு பெயர் சூட்டியதன் மூலம் எனக்கு பெரிய துக்கத்தை தந்துள்ளார்.
எந்த சொல்லை வாழ்நாள் எல்லாம் சொல்லி என்னை நான் புதுப்பித்துக் கொண்டேனோ? எந்த சொல் தமிழர்கள் மத்தியில் மந்திர சொல்லாக மதிக்கப்பட்டதோ? எந்த சொல்லை உச்சரித்தால் எதிரிகள் குலைநடுங்குவார்களோ? அந்த ‘திராவிடம்’ என்ற சொல்லை அகற்றிவிட்டு, தமிழர்களின் வாழ்வுக்கு ஏணியாகவும், சாமானியனை சரித்திரத்தில் உட்கார வைத்த அண்ணாவின் பெயரை தூக்கி எறிந்து விட்டு கட்சிக்கு பெயர் சூட்டி இருக்கிறார். இதன் மூலம் பாதகத்தை டி.டி.வி.தினகரன் செய்திருக்கிறார். கொள்கை திரவியத்தை கொட்டி கவிழ்த்திருக்கிறார். யாரும் செய்யத்துணியாததை துணிச்சலாக செய்திருக்கிறார். இப்படி செய்திருப்பதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கைக்கு மோசம் விளைவித்திருக்கிறார்.
திராவிடம் இல்லாத தமிழகம் என்று முழங்கும் சக்திகளுக்கு பலம் சேர்க்கும் விதமாக டி.டி.வி.தினகரனின் நடவடிக்கை அமைந்துள்ளது.
அந்த பாவத்தில் எனக்கு பங்கு இல்லை. எனவே, நான் தினகரன் கட்சியில் இருந்து விலகுகிறேன். அதற்காக நான் வேறு அணியில் இணைய போவது இல்லை. இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. பெயர் வைப்பதிலேயே நம்பிக்கை வைக்கவில்லை என்றால் எதை நம்புவது? தமிழக அரசியலில் அடைபட்டு கிடக்காமல் நான் முழுமையாக விலகுகிறேன்.
கட்சி அரசியலில் இருந்து விலகி விட்டேன். தத்துவ அரசியலில் இருந்து விலகவில்லை. இனிமேல் எந்த கட்சி கொடியையும் கையில் ஏந்த மாட்டேன். எந்த அரசியல் தலைவர் நிழலிலும் ஒதுங்க மாட்டேன். எந்த தலைவன் கட்டளைக்கும் காத்திருக்க மாட்டேன். இனி தமிழின் பெருமை பேசும் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம்.
நான் கொள்கைக்காக முரசறைகிற ஒரு பேச்சாளன். எனக்கு ஒரு நிறைவான வாழ்க்கை கூட அமைந்தது கிடையாது. இதைத்தாண்டி நான் சிந்தித்தது இல்லை. இதுவே போதும் என்று நிறைவு கண்டவன். என்னிடம் உள்நோக்கம் இருப்பதாக யாராவது சொல்வார்கள் என்றால் அவர்கள் நாக்கு அழுகிப்போகும்.
நான் தினகரன் கட்சியை விட்டு விலகுவதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. கட்சிப்பெயர் வைப்பதிலேயே தோற்றுப்போய்விட்டால் டி.டி.வி.தினகரன் வேறு எதை காப்பாற்றப் போகிறார். பெயர்தானே முக்கியம். அதில்தானே தார்ப்பரியம் இருக்கிறது. அதில் நம்பிக்கை இல்லை என்றால் வேறு எதில் நம்பிக்கை இருக்கப்போகிறது?
அ.தி.மு.க.வினர் ஒரு டெண்டர் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் டெல்லி ஏகாதிபத்தியத்தின் காலடியில் விழுந்து கிடக்கிற கூட்டமாக இருக்கிறார்கள். அவர்களை திராவிடம் என்று சொல்லாதீர்கள்.
அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு சொல்லவில்லை என்று கூச்சம் இல்லாமல் மத்திய மந்திரி நிதின் கட்கரி தமிழ கம் வந்து பேசிவிட்டு சென்றார். கர்நாடக முதன்மைச்செயலாளரும் அதை திரும்ப, திரும்ப சொல்கிறார். அப்படி சொல்லாதீர்கள் என்று கூற தமிழக அரசுக்கு தைரியம் இல்லை. எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுத்து காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. மெரினா புரட்சியை போன்று இதற்கு ஒரு புரட்சியை நடத்தினால் மட்டும்தான் இதற்கு விடிவுகாலம் வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story