தூத்துக்குடியில் எல்.ஐ.சி. புதிய பீமாஸ்ரீ பாலிசி திட்டம் அறிமுகம்


தூத்துக்குடியில் எல்.ஐ.சி. புதிய பீமாஸ்ரீ பாலிசி திட்டம் அறிமுகம்
x
தினத்தந்தி 18 March 2018 2:30 AM IST (Updated: 18 March 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் எல்.ஐ.சி.யின் புதிய பீமாஸ்ரீ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் எல்.ஐ.சி.யின் புதிய பீமாஸ்ரீ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய பாலிசி திட்டம்

எல்.ஐ.சி. நிறுவனம் பீமாஸ்ரீ என்னும் புதிய பாலிசி திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. இது குறித்த காலம் வரை பணம் செலுத்தும் ‘மணிபேக்’ திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் ஆயுள் காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. முதல் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் காப்புத் தொகைக்கு ரூ.50 வீதம் உத்திரவாத ஊக்கத்தொகை வழங்கப்படும். 6-ம் ஆண்டு முதல் பிரிமீயம் செலுத்தும் காலம் வரை ரூ.55 வீதம் வழங்கப்படும். முதிர்வு தொகை மற்றும் இறப்பு காப்புத் தொகையை அடுத்த 5, 10, 15 ஆண்டுகளுக்கு மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, வருட தவணையாக பெறும் வசதி உள்ளது. வாழ்வுகால பயன் தொகையை விருப்பத்துக்கு ஏற்ப ஒத்தி வைத்து வட்டியுடன் பெறும் வசதி உள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின்பு கடன் மற்றும் சரண்டர் செய்யும் வசதி உள்ளது. வருமான வரிச்சலுகை, முதிர்வு தொகைக்கு வரிவிலக்கு உண்டு.

அறிமுகம்

இந்த பாலிசி திட்டம் அறிமுகம் நிகழ்ச்சி தூத்துக்குடி எல்.ஐ.சி. அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நெல்லை முதுநிலை கோட்ட மேலாளர் வசந்தகுமார் தலைமை தாங்கி திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். வணிக மேலாளர் வெங்கடகிருஷ்ணன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் எல்.ஐ.சி. ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விற்பனை மேலாளர் குமார் செய்து இருந்தார்.

பின்னர் நெல்லை முதுநிலை கோட்ட மேலாளர் வசந்தகுமார் நிருபர்களிடம் கூறும்போது, நெல்லை கோட்டத்தில் 20 லட்சம் பாலிசிதாரர்கள் உள்ளனர். நடப்பு நிதியாண்டில் நெல்லை கோட்டத்தில் மொத்த பிரிமீயம் இலக்கு ரூ.229 கோடி ஆகும். ஆனால் ரூ.245 கோடி பிரிமீயம் ஈட்டி தென்மண்டல அளவில் 2-வது இடத்தை எட்டி பிடித்து உள்ளது. அதே நேரத்தில் 1 லட்சத்து 51 ஆயிரம் பாலிசி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 1 லட்சம் பாலிசி சேர்க்கப்பட்டு உள்ளது.

இந்த மாதத்துக்குள் இலக்கு எட்டப்படும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பீமாஸ்ரீ திட்டத்தில் 5 ஆயிரம் பாலிசிகள் வரை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

Next Story