ஆலங்குளத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி சினிமா வினியோகஸ்தர்கள் 3 பேர் கைது
ஆலங்குளத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற சினிமா வினியோகஸ்தர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்,

சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் நேற்று முன்தினம் இரவு பஸ்நிலைய பகுதியில் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பஸ்நிலையம் அருகில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் 3 பேர் காரை நிறுத்தி, அந்த இடத்தில் அசுத்தம் செய்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர், அவர்களை தட்டிக் கேட்டார். இதை தொடர்ந்து அந்த 3 பேரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திடீரென வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த 3 பேரும், இதைக் கேட்க நீ யார்? என அவரை எச்சரித்தனர். அதற்கு அவரும், ஆலங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என கூறினார். ஆனாலும் அவர்கள், உன்னிடம் உள்ள அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் எனக்கூறி மீண்டும் தகராறு செய்தனர். பின்னர் தனது அடையாள அட்டையை அவர் காட்டியதும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து சுதாகரன் மீது தாக்குதல் நடத்தி அவரது கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்தனர்.
இதனை கவனித்த அருகில் நின்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து 3 பேரிடம் இருந்து சுதாகரனை காப்பாற்றியதோடு, அந்த 3 பேரும் தப்பித்து விடாமல் சுற்றி வளைத்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீஸ் நிலையத்தில் இருந்து மற்ற போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் பிடித்துச் சென்றனர்.
3 பேர் கைது
ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் வைத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘நெல்லை சந்திப்பு மணிகண்டன் (வயது 40), புதுச்சேரியை சேர்ந்த வெங்கடாசலம் (50), பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த சொக்கலிங்கம் என்பதும், இவர்கள் சினிமா வினியோகஸ்தர்கள் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி கொலை செய்ய முயற்சித்ததாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர்.

Related Tags :
Next Story