அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைக்க நீதிபதிகள்-வக்கீல்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்
மாற்றுத்திறனாளிகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைக்க நீதிபதிகள், வக்கீல்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி சார்பு நீதிமன்றம், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள வக்கீல்கள் சங்க கட்டிடம் மற்றும் திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு உள்ள விரைவு நீதிமன்ற நடுவர் குடியிருப்பு ஆகியவை திறப்பு விழா நேற்று நாமக்கல்லில் நடந்தது.
விழாவுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேலுமணி, தாரணி, அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், டாக்டர் சரோஜா, கலெக்டர் ஆசியா மரியம், பி.ஆர்.சுந்தரம் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமை தாங்கி, புதிய கட்டிடங்களுக்கான கல்வெட்டை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மற்ற நீதிமன்றங்களை காட்டிலும், கீழமை நீதிமன்றங்கள் மிகவும் முக்கியமானது ஆகும். ஏனென்றால் கீழமை நீதிமன்றங்கள் தான் சாதாரண மக்களுக்கும் நீதியை முதலில் வழங்குகிறது. மேலும் அடித்தட்டு மக்கள் நீதி வேண்டி கீழமை நீதிமன்றத்தை தான் நாடுகின்றனர். கீழமை நீதிமன்றங்கள் மூலம் நீதி சமமாக வழங்கப்படுகிறது.
இப்போது திறக்கப்பட்டு உள்ள புதிய நீதிமன்றங்கள் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டு, மக்கள் நீதியை பெறுவார்கள் என எதிர்பார்க்கிறேன். நீதிமன்றம் மூலம் நீதி வழங்குவதில் நீதிபதிகள், வக்கீல்கள், வழக்கு தொடுப்பவர்கள் மற்றும் மாநில அரசுகள் என அனைவரும் சமம்.
பொருளாதார ரீதியாக நீதிமன்றங்கள் அரசுகளை சார்ந்தே இருக்கின்றன. ஏனெனில் நீதிமன்றம் பொருளாதார ரீதியாக தனி அமைப்பு கிடையாது. இந்த வகையில் அரசின் ஆதரவு மிகவும் முக்கியமானதாக உள்ளது. அரசும் தொடர்ந்து நீதிமன்ற கட்டமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
நீதிமன்றங்களில் வக்கீல்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. சிறப்பான வாத திறமை உள்ள வக்கீல்கள் மூலம் சிறப்பான நீதி கிடைக்க ஏதுவாகிறது. வக்கீல்கள் வழக்கு விசாரணையை தாமதப்படுத்த காரணமாக இருக்கக்கூடாது. அதேபோல் நீதிபதிகளும் வழக்குகளை விரைவில் முடிக்க முயற்சிக்க வேண்டும், அதே சமயத்தில் தீர்ப்புகளும் சிறப்பானதாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், தீர்ப்பில் தவறுகள் ஏதும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
தீர்ப்பில் விளக்கமான தகவல்கள் இல்லாவிட்டாலும், சில அடிப்படை தகவல்கள் இடம்பெற வேண்டும். வழக்கு தொடுப்பவர்களுக்காக தான் வக்கீல்களும், நீதிபதிகளும் இருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகள், அடித்தட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வக்கீல்களும், நீதிபதிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
சமூகத்தில் இருந்து ஏராளமான தகவல்களை பெற்று உள்ளோம். அவற்றை நல்ல தீர்ப்பளிப்பதன் மூலம் மீண்டும் அந்த சமூகத்திற்கே திருப்பி அளிக்க கடமைப்பட்டு உள்ளோம். நீதிமன்ற வளாகங்களில் வங்கி கிளைகள் இருக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது. ஏதாவது ஒரு வங்கி நீதிமன்ற வளாகங்களில் கிளை அமைக்க முன்வந்தால் பரிசீலிப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ்.கே.வேல், நாமக்கல் குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் அய்யாவு, சிவில் வக்கீல்கள் சங்க தலைவர் ராஜூ, பரமத்தி பார் அசோசியேசன் தலைவர் மகேந்திரன் ஆகியோரும் பேசினர்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, நீதிபதிகள், மாவட்ட அரசு வக்கீல் தனசேகரன், மாவட்ட வக்கீல்கள் சங்க செயலாளர் கணேசன், பொருளாளர் பரணீதரன், சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்க செயலாளர் அய்யப்பமணி, மாவட்ட கூடுதல் அரசு வக்கீல் சிவக்குமார், அரசு சிறப்பு வக்கீல் லோகநாதன் உள்பட அனைத்து அரசு வக்கீல்கள் மற்றும் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், கோர்ட்டு பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் வரவேற்று பேசினார். முடிவில் தலைமை குற்றவியல் நீதிபதி கருணாநிதி நன்றி கூறினார்.

Related Tags :
Next Story