சேரம்பாடி சுங்கம் குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து, பொதுமக்கள் அச்சம்
சேரம்பாடி சுங்கம் குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே சுங்கம் பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் சில குடியிருப்புகளை ஒட்டி மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் குடியிருப்பு வாசிகள் மற்றும் குழந்தைகள் மின்கம்பிகளை தொடும் அளவுக்கு தாழ்வாக செல்கின்றன.
இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த ஆபத்தான மின்கம்பிகளை உயர்த்தி பொருத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் எந்த நேரத்திலும் உயிர் சேதம் ஏற்படுமோ? என்ற பீதியில் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
வீடுகளில் பெரியவர்கள் உள்ள நேரத்தில் குழந்தைகளை கண்காணிக்க முடியும். வேலை விஷயமாக வீட்டில் குழந்தைகளை தனியாக விட்டு செல்ல பயமாக உள்ளது. எந்த நேரத்திலும் குழந்தைகள் விளையாட்டு தனமாக குடியிருப்புகளை ஒட்டி தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை பிடித்து விடும் அபாயம் உள்ளது.
இதனால் எப்போதும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு இருக் கிறது. மின்கம்பிகளை மாற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை. உயிரிழப்பு ஏற்படும் முன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story