போலீசாரை தள்ளி விட்டு விசாரணை கைதி தப்பி ஓட்டம்
உத்தமபாளையத்தில் சிறை முன்பு போலீசாரை தள்ளிவிட்டு விசாரணை கைதி ஒருவர் தப்பியோடி விட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தமபாளையம்,
போடி சவுந்தரவேல் நகரை சேர்ந்தவர் தண்டபாணி. விவசாயி. இவர் நேற்று முன்தினம் திருவள்ளுவர் காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சின்னமனூர் தேவர் நகரை சேர்ந்த தினேஷ் லட்சுமணன் (வயது 29) என்பவர் தண்டபாணியிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்து சென்றார். இதுகுறித்து போடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ் லட்சுமணனை கைது செய்தனர். பின்னர் அவரை போடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவரை நேற்று முன்தினம் இரவு சுமார் 10.45 மணியளவில் போடி டவுன் போலீசார் ஆனந்த், வேணுகோபால் ஆகியோர் உத்தமபாளையம் கிளைச்சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறைகாவலரிடம் கோர்ட்டு உத்தரவை போலீஸ்வேணுகோபால் கொடுக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது சிறை வாசல் முன்பு போலீஸ் ஆனந்தை கீழே தள்ளி விட்டு தினேஷ் லட்சுமணன் தப்பியோடி விட்டதாக தெரிகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ்நிலையத்தில் ஆனந்த் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தினேஷ் லட்சுமணனை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே போடி டவுன் போலீஸ் நிலையத்தில் இவர் மீது வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story